Posts

தேனருவி அருகில் உள்ள சன்யாசிபுடவு கல்வெட்டு வாசிப்பதற்கு சற்றே சிரமமுடைய தொல்எழுத்து வடிவமுடையது.

தென்றல் தவழும் தென் பொதிகை மலை அமைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அம்பாசமுத்திரம் அடுத்த அய்யனார் குளம் மற்றும் குற்றாலம் மலைப்பகுதியின் மேற்பகுதியில் என இரு இடங்களில் தமிழி கல்வெட்டுகள்  இடம்பெற்றுள்ளன..  இதில் தேனருவி அருகில் உள்ள சன்யாசிபுடவு கல்வெட்டு வாசிப்பதற்கு சற்றே சிரமமுடைய தொல்எழுத்து வடிவமுடையது.. அதே அம்பாசமுத்திரம் அடுத்த அய்யனார் குளம் பொத்தையில் காணப்படும் தமிழி கல்வெட்டுகள் மிகத் தெளிவான எழுத்தமைதியோடும் கற்படுக்கைகளோடும் காணப்படுகின்றன. ஒரே இடத்தில் 2 கற்படுக்கைகள் மற்றும் தமிழி கல்வெட்டுகள் :  1) ராஜாப் பாறை 2) நிலாப் பாறை 1) ராஜாப் பாறை : இயற்கையாக அமைந்த குகையின் ஊடே இரண்டு கற்படுக்கைகளை அமைத்து மழை நீர் ஒழுகாதவாறு காடி அமைக்கப்பட்டுள்ளது..  கல்வெட்டு வாசகம் :  பள்ளி செய்வித்தான் கடிகை (கோ) வின் மகன் பெருங்கூற்றன் கடிகைக் அரசனின் மகன் பெருங்கூற்றன் என்பான் இப்பள்ளியை செய்வித்துள்ளான்  இப்பாறையிலேயே திருச்சி பார்த்தியால் தொன்மையான பாறை ஓவியமும் கண்டுபிடிக்கப்பெற்றது..  2) நிலாப்பாறை : ராஜாப் பா...

பொதிகை மலை என்றழைக்கப்படும் பொதியில் (Potiyil) பௌத்தம்

Image
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இணையும் எல்லையில் அமையப்பெற்றுள்ளது. தொன்மைக் காலத்தில் புத்த மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும் பொதிகை. சீனா மற்றும் திபெத் நாட்டில் புத்த மத எழுத்துப் படைப்புகளில் இம்மலைப் பகுதி போதலகிரி (Pothalagiri) போதலா (Potala) மற்றும் போதலக (Potalaka) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மகாயான மரபு புத்த மதத்தின் படி போதலக, புத்த கடவுள் அவலோகிதா-வின் உறைவிடம் பொதிகை ஆகும். அவலோநிதா, தனது துணைவியார் தாராதேவியுடன் இம்மலையில் தங்கியதாக சொல்லப்படுகிறது. தாராசூக்கம் (Tarasookkam) என்ற புத்தமத நூலில் அவலோகிதா- வை போதலகிரி நிவசினி (Potalagiri nivasini) என்று குறிக்கின்றது. நீண்ட காலமாக போதலக மலைப் பற்றிய உண்மை விவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கப் பெறவில்லை. கி.பி.645-ல் இந்தியாவில் பயணம் செய்த சீன யாத்திரிகள் யுவான் சுவாங் தனது பயண குறிப்பில் போதலாக மலையின் இருப்பிடம் மற்றும் அதன் அழகைப் பதிவு செய்துள்ளார். யுவான் சுவாங்கின் குறிப்பின்படி போதலாக மலை மோ-லோ-ய (Mo-lo-ya) Malaya (மயல) மலையின் கிழக்கிலும், மோ-லோ-கு.த. (மலை நாடு)க்கு வ...

கல்வெட்டுகளில் பொங்கல் விழா

Image
கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதில் இருந்தே தமிழ் மக்களின் நீண்ட நெடிய வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழாவே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் என்பது உணவின் பெயர். பொங்குதல் என்பதன் வினைப்பெயரே பொங்கல். பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல், சமைத்தல், மற்றும் செழித்தல் என என்ற பல பொருள் உண்டு. பொங்கல் பண்டிகையை தைப்பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தைத்திருநாள் என்று பல பெயர்களில் அழைக்கிறோம். பண்பாட்டின் மக்கள் விழாவாகவே பொங்கல் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கிறது. தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியோடும் பேரரசுகளின் வளர்ச்சியோடும் மிகுந்த தொடர்புடைய தாகவே பொங்கல், தமிழ் மக்களின் பண்பாடாக மலர்ந்தது. பொங்கல் விழா காலப் போக்கில் பல வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது. தமிழகம் முழுவதுமான விவசாயிகளின் ஒற்றுமையை வளமைப் பண்பாட்டை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா உர...

தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கிய நல்லூர் இது.

Image
 ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ளது தெற்கு காரசேரி. தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கிய நல்லூர் இது. இந்த கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் #குலசேகர_நாதர் என்றும் இறைவியார்  #குலசேகர_நாயகி என்றும் அருள்பாலிக்கிறார்கள். குலசேகரப் பட்டணத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் ஒரே நேரத்தில் 9 சிவன் கோயில்கள் கட்டினார். அக்கோயில்களில் ஒரே நேரத்தில் பூஜை செய்து மகிழ்ந்தார். குலசேகரபட்டிணத்தில் இருந்து திருவாங்கூர் வரை இந்த 9 கோயில்களும் அமைந்திருந்தன. அந்த ஒன்பது கோயில்கள் வரிசையில் இதுவும் அடங்கும்கோயிலில் சிவ பெருமான் கிழக்கு நோக்கிச் சற்று இடது புறம் சாய்ந்து பக்தர்கள் கோரிக்கையைக் கேட்கும் விதமாகக் காட்சியளிக்கிறார். அம்மை குலசேகர நாயகி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். குலசேகர_மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்னை வரும் போதெல்லாம் இக்கோயிலில் வந்து வணங்கித்தான் வெற்றி பெற்றுள்ளார். வெற்றியைப் பெற்றுத் தரும் தலமாக இது விளங்கி வருகிறது.

Nmms-Social Science Guide

NMMS SOCIAL SCIENCE GUIDE

துண்டுபோட அப்பாறையில் குழிகள் போட்டு கம்புகள் நட்டு நீர் ஊற்றி பாறையின் விரியும் திறனை சோதிப்பார்கள்.

Image
ஒரு குடவறை ஒன்று அமைக்க முதலில் சரியான பாறையைத் தேர்வு செய்வார்கள். அப்பாறையின் தாங்குதிறனை பரிசோதிக்க .. அந்த நீண்ட பாறையின் ஓரத்தில் 4 × 4 அளவு சதுரப்பரப்பை  வெட்டி குடைந்துப் பார்ப்பார்கள்..  அப்பாறையை துண்டுபோட அப்பாறையில் குழிகள் போட்டு கம்புகள் நட்டு நீர் ஊற்றி பாறையின் விரியும் திறனை சோதிப்பார்கள். இந்த இரண்டு சோதனையிலும் தேர்ச்சி பெறும் அப்பாறைத் தொடர் குடவறை குடையத் தேர்வாகும்.  இப்பரிசோதனை நடந்த தடயங்களை இன்றும் நாம் காணலாம். மதுரை ஆனைமலை நரசிங்கப்பெருமாள் குடவறைக் கோவில் அருகே ..  லாடன் கோவில் என்றழைக்கப்படும் முருகன் குடவறைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குடவரை பாறைத் தேர்வின் சோதனை நடந்த தடம் இன்றும் இக்குடவறைக் கோவிலில் உள்ளது. குடவறையின் ஓரத்தில் ஒரு சிறு சதுரபரப்புக்கு பாறையை குடைந்து பாறையின் தாங்குதிறனை  சோதித்துள்ளார்கள். இக்குடவரையின் முன் உள்ள பாறை ஒன்றில் குழிகள் இட்டு குச்சிகள் நட்டு நீர் ஊற்றி பாறையின் விரிதிறனை சோதித்துள்ளார்கள். இந்த இரண்டு தடங்களையும் இன்றும் நாம் காணலாம். குடவறையின் சிறப்புகள்.. முருகனுக்...

வேட்டையாடிப் பெண்கள்

Image
பெண்கள் வேட்டையாடுவது போல் உள்ள வில் அம்புடன் கூடிய பெண்களின் சிற்பங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக காணக் கிடைக்கின்றன.பண்டைய சமுதாயத்தில் ஆண்கள் வேட்டையாடி உணவுப் பொருளைக் கொண்டு வருவார்கள் என்றும், பெண்கள் ஒரு இடத்தில் தங்கியிருந்து உணவைச் சமைத்து கொடுப்பார்கள் என்றும் பொதுவாகச் சொல்லப்படுகின்றது. இந்தப் பொது சிந்தனையை மாற்றி அமைக்கும் வகையில் அண்மைய ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பு திகழ்கிறது.பெரு நாட்டின் ஆண்டியன் மலைப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில் 9000 ஆண்டுகள் பழமையானது என அறியபப்ட்ட ஒரு எலும்புக்கூட்டினை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். ஒரு வேட்டைக்காரருக்கு உருவாக்கப்பட்ட ஒரு ஈமக்கிரியை பகுதி அது. அந்த எலும்புக்கூட்டின் அருகில் இருந்த வேட்டைக்கருவிகளை ஆராய்ந்த போது இது மிகத் திறமை வாய்ந்த ஒரு வேட்டைக்க்காரரது உடமையாக இருக்கும் என்று கருதினர்.  வேட்டைக்கருவியோடு இணைந்து கிடைத்த 20 கருவிகளும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரரின் படைப்பு என்று கருதினர். நிச்சயமாக இந்த வேட்டைக்காரர் ஒரு முக்கிய வேட்டைக்குழுவின் தலைவனாக இருக்க வேண்டும் என்றும் கருதினார். அதன் பின்னர் எலும்புக்கூட்ட...