துண்டுபோட அப்பாறையில் குழிகள் போட்டு கம்புகள் நட்டு நீர் ஊற்றி பாறையின் விரியும் திறனை சோதிப்பார்கள்.

ஒரு குடவறை ஒன்று அமைக்க முதலில் சரியான பாறையைத் தேர்வு செய்வார்கள். அப்பாறையின் தாங்குதிறனை பரிசோதிக்க .. அந்த நீண்ட பாறையின் ஓரத்தில் 4 × 4 அளவு சதுரப்பரப்பை  வெட்டி குடைந்துப் பார்ப்பார்கள்..
 அப்பாறையை துண்டுபோட அப்பாறையில் குழிகள் போட்டு கம்புகள் நட்டு நீர் ஊற்றி பாறையின் விரியும் திறனை சோதிப்பார்கள்.

இந்த இரண்டு சோதனையிலும் தேர்ச்சி பெறும் அப்பாறைத் தொடர் குடவறை குடையத் தேர்வாகும். 
இப்பரிசோதனை நடந்த தடயங்களை இன்றும் நாம் காணலாம்.

மதுரை ஆனைமலை நரசிங்கப்பெருமாள் குடவறைக் கோவில் அருகே .. 
லாடன் கோவில் என்றழைக்கப்படும் முருகன் குடவறைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குடவரை பாறைத் தேர்வின் சோதனை நடந்த தடம் இன்றும் இக்குடவறைக் கோவிலில் உள்ளது.
குடவறையின் ஓரத்தில் ஒரு சிறு சதுரபரப்புக்கு பாறையை குடைந்து பாறையின் தாங்குதிறனை  சோதித்துள்ளார்கள். இக்குடவரையின் முன் உள்ள பாறை ஒன்றில் குழிகள் இட்டு குச்சிகள் நட்டு நீர் ஊற்றி பாறையின் விரிதிறனை சோதித்துள்ளார்கள்.

இந்த இரண்டு தடங்களையும் இன்றும் நாம் காணலாம்.

குடவறையின் சிறப்புகள்..

முருகனுக்கு மட்டும் இருக்கும் ஒரு குடவரைக் கோவில்.

பாண்டியன் பராந்கநெடுஞ்சடையன் காலமான கி.பி.8 ஆம்  நூற்றாண்டில் எடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

வலையல் வியாபாரிகளான லம்பாடியர்

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

இந்த இடத்தின் பெயர் RIDGE POINT.