பொதிகை மலை என்றழைக்கப்படும் பொதியில் (Potiyil) பௌத்தம்
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இணையும் எல்லையில் அமையப்பெற்றுள்ளது. தொன்மைக் காலத்தில் புத்த மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும் பொதிகை. சீனா மற்றும் திபெத் நாட்டில் புத்த மத எழுத்துப் படைப்புகளில் இம்மலைப் பகுதி போதலகிரி (Pothalagiri) போதலா (Potala) மற்றும் போதலக (Potalaka) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மகாயான மரபு புத்த மதத்தின் படி போதலக, புத்த கடவுள் அவலோகிதா-வின் உறைவிடம் பொதிகை ஆகும். அவலோநிதா, தனது துணைவியார் தாராதேவியுடன் இம்மலையில் தங்கியதாக சொல்லப்படுகிறது. தாராசூக்கம் (Tarasookkam) என்ற புத்தமத நூலில் அவலோகிதா- வை போதலகிரி நிவசினி (Potalagiri nivasini) என்று குறிக்கின்றது. நீண்ட காலமாக போதலக மலைப் பற்றிய உண்மை விவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கப் பெறவில்லை. கி.பி.645-ல் இந்தியாவில் பயணம் செய்த சீன யாத்திரிகள் யுவான் சுவாங் தனது பயண குறிப்பில் போதலாக மலையின் இருப்பிடம் மற்றும் அதன் அழகைப் பதிவு செய்துள்ளார். யுவான் சுவாங்கின் குறிப்பின்படி போதலாக மலை மோ-லோ-ய (Mo-lo-ya) Malaya (மயல) மலையின் கிழக்கிலும், மோ-லோ-கு.த. (மலை நாடு)க்கு வடக்கே அமைந்துள்ளது. மோதலக பற்றி யுவாங் சுவாங்கின் விவரக் குறிப்புகள் பல மேலை நாட்டு அறிஞர்களை அதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ள ஊக்கம் ஏற்படுத்தியது. யுவான் சுவாங் அறிக்கை ஆதார அடிப்படையில் R.F.ஜான்ஸ்டன் என்பவர், கன்னியாகுமரிக்கு அருகாமையில் மலய மலையின் கிழக்குப் பகுதியில் "போதலக" இருப்பதைக் கண்டறிந்தார். ஜப்பானிய அறிஞர் கோமகிசி தக்குவா (Komakichi Takakawa) மலய மலையின் தெற்கு திசையில் இருப்பதை கண்டறிந்தார். மேலும், அவர் தாலுமி குறிப்பிடும் பெட்டிகோ (Bettigo) மலைதான் போதலக மலை என்று கண்டறிந்தார்,உ
"லாசா மற்றும் அதன் அற்புதங்கள்" (Lhasa and its Musterics) என்ற புத்தகத்தில் லெப்டினன்ட் கர்னல் ஆஸ்டின் வேடல் லாசாவான் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஜோ-கியாங் அல்லது ஆசான் உறைவிடம் என்ற கோயிலுக்கு மேற்கொண்ட பயணத்தை விவரிப்பதுடன் போதலக அல்லது உயர்ந்த பாறையின் நகரத்தை நோக்கி அமைந்துள்ள தலாய்லாமாவின் மாளிகைப் பற்றி கல்வெட்டுக் குறிப்பை கோடிட்டு காட்டுகிறார். அங்கு செதுக்கப் பட்டுள்ள கல்வெட்டு லாசாவில் அமைந்துள்ள போதலகமலையின் சிறப்பினை எடுத்துரைத்து, அதனை மூன்று போதலகாவில் மிகவும் சிறந்தது என்று விவரிக்கின்றார். (Lhasa as “the best of the three potalas") மேலும், டாக்டர் வேடல் தனது அடிக்குறிப்பில் மற்ற இரண்டு போதலக இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி (cape comorin)யிலும், சீன நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். புத்த மத மரபுப்படி தலாய் லாமாதான் அவலோகிதா அவதாரம் என்பது இங்கு அறிய வேண்டியுள்ளது.
ஜப்பான் நாட்டு அறிஞர் டாக்டர் ஷு இகோதகா 'தமிழ்நாட்டில் புத்த மதம்' என்ற நூலில் பொதியில் மற்றும் போதலக சொல்லின் தோற்றத்தை விவரித்துள்ளார். அவரின் கூற்றின்படி, பொதியில் என்ற சொல் போதி மற்றும் இல் சேர்க்கையில் உருவானது என்றும் பொதியில் போதி சாத்துவாஸ் அவலோகிதாவின் உறைவிடம் என்பது அறியப்படுகிறது. புத்த உலகம்தான் போதலக என்பதாகும் என்று கூறுகின்றார். புத்தத் துறவிகளின் புனித இடமாக உருவெடுத்தால் இம்மலை "பொதியில்" என்று அழைக்கப்பட்டது.*
அசோகரின் மகன் மகேந்திரன் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு வந்ததால் இம்மலைத் தொடரின் ஒரு பகுதி மகேந்திரிகிரி (Mahendragiri) என்று அழைக்கப்பட்டதாக கூறுவர். மேலும் மகேந்திரிகிரிக்கு அருகில் சங்கமித்ரா என்ற பெயர் கொண்ட இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உறைவிடமாக போதலகாவிற்கு மகேந்திரனும், சங்கமித்ராவும் அவலோகிதா மற்றும் தாரா வருகை புரிந்ததற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் உணரப்படுகிறது. பொதியில் மலைக்கு அருகில் உள்ள ஒரு பாறை தாரவத்தம் (Taravattam Parai) பாறை என்று அழைக்கப்படுகிறது. தாராவாதம் பாறை என்றால் தாரா வசித்த இடமாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு இடங்கள் தாரவினை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தொன்மைக் காலத்தில் தாராவழிபாடு கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமாக இருந்திருக்க வேண்டும் என்று உணர முடிகிறது.
மணிமேகலை இயற்றிய ஆசிரியர், புத்தத் துறவிகள் தியானம் செய்த பொதியில் மலைச் சரிவின் வழியாகச் சிற்றாறு பாய்ந்தோடியது தனது படைப்பில் விவரித்துள்ளார். மேலும், அவர் பொதியில் என்ற சொல்லை புத்த மதத்தினர் பள்ளிகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.' சங்க இலக்கியமான குறுந்தொகை பொதியில் மலையின் மேல் ஆலமரத்திற்கு அடியில் புத்த விகாரம்' இருந்ததை விவரிக்கினார். இம்மலையில் கடவுள் தோன்றி மறைந்ததைப் பற்றிய விவரங்கள் அகநானூறில் காணப்படுவதுடன் முதியோர்கள் ஒன்று கூடி தாயக்கட்டை விளையாட்டை சிதலடைந்த கோயிலில் விளையாடிய செயல்பாட்டை புறநானூறும்'' விவரிக்கின்றது. இவைகளெல்லாம் அக்காலத்தில் உருவான புத்த மத வளர்ச்சியையும், மறைந்ததையும் உணர்த்துகிறது."
புத்தமித்திரர் கூற்றின்படி, அகத்தியர் அவலோகிதாவின் சீடராவார். இந்த அவலோகிதர் இடத்திலே அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்பது தமிழ்நாட்டு பௌத்தர்களின் நம்பிக்கை 12 எழுதிய இக்கூற்று கி.பி.10 நூற்றாண்டைச் சார்ந்த புத்தமித்ரா தமிழ் இலக்கணமான வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதியில் மலை பல வீரசோழியத்தில் ஆண்டுகள் அவலோகிதாவின் உறைவிடமாக இருந்துள்ளதை அறியமுடிகிறது.
பௌத்தர்களால் வணங்கப்படும் தெய்வங்களில் அவலோகிதர் ஒருவர். இவருக்கு உலகநாதர் என்றும் போதிசத்துவர் என்றும் பெயருண்டு. அறநெறியைப் பூவுலகத்தில் போதிப்பதற்காகப் புத்தராகப் பிறக்கிறவர் இவரே. தமிழ்நாட்டில் பௌத்தம்
பரவியிருந்த காலத்தில், அவலோகிதர் உருவ வழிபாடு நடந்தது. நாகைப்பட்டிணத்தில் கண்டெடுக்கப்பட்ட அவலோகிதரின் செம்பு உருவங்களைச் சென்னை அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம். வட இந்தியாவின் அவரது வழிபாடு கி.பி.மூன்றாம் நூற்றாண்டி லிருந்து வழக்கத்தில் இருந்துள்ளது. கி.பி.ஏழாம் நூற்றாண்டு வாக்கில் அவர் போதிசத்துவர்களில் பிரபலமானவரானார் பிந்தய காலச் சிற்பங்களில் இவரின் தாரா என்னும் பௌத்த பெண் தெய்வமும் இடம்பெற்றது. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவரது உருவத்தில் அவர் ஆறு கரங்களுடன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். அவரது பிரதானக் குறியீடுகளான ரூத்ராட்சமும், பத்மமும் (தாமரை) நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டன.3
பொதிகை (பொதியில்) மலையை அடுத்து 'மலைய நாடு என்னும் பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பௌத்த மதத்தவுராகிய வச்சிரபோதி (கி.பி.661-730) என்பவர் பிறந்தார். சீன நாட்டிலும், ஜப்பான் நாட்டிலும் ஜென் பௌத்த (ZEN BUDDHISM) மதத்தை பரப்பியர் இவரே என்பதை முன்னேரே பார்த்தோம்.14
கபிலர் பரணர் வாழ்ந்த காலத்தில் பொதிகையில் சமணமும் பௌத்தமும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. பல்லவ நாட்டிற்கு வந்த யுவான்சுவாங் பௌத்தம் சற்று நலிந்த நிலையில் இருந்தது என்கிறார். என்றாலும் சுருளி மலையிலுள்ள அவலோகிதேசுவான் கோயிலை நோக்கித் திபெத் போன்ற தொலை இடங்களிலிருந்தும் பௌத்தர்கள் வந்தனராம். இம்மலை பொதியில் என்றும் பொதாலக என்னும் அழைக்கப்பட்டது.
பொதியில் முனிவன் புத்தனே, அகத்தியன் அல்லன் இம்மலையிலிருந்து மதுரையை நோக்கி வீசும் தென்றலை இளங்கோ "பொதியில் தென்றல்" என்றார். மேலும் பொதிகையை தாலமி, பிளினி போன்றோர் "பொதிகோ" என்றனர். யுவான் சுவாங் (கி.பி.640) காஞ்சியில் இருந்த போது பொதியில் என்ற பொதலசாவின் இறைவன் அவலேவாகிதசுவரன் என்கிற புத்தன் (சாஸ்தா) என்று தான் சொல்லியிருக்கிறார்.
மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து 'பொதியில்' (பொதிகை) தொன்மைக்காலத்தில் பௌத்தம் இருந்ததை அறியமுடிகிறது.
பொதிகை தொன்மை காலத்தில் பௌத்த மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும். பௌத்தத்தின் பிரபலமான போதிசத்துவர் அவலோகிதாவின் உறைவிடம் பொதிகை. அங்கு அவர் தனது துணைவியார் தாராதேவியுடன் தங்கி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. தொன்மைக்காலத்தில் பொதிகை புத்தத் துறவுகளின் புனித இடமாக உருவெடுத்திருந்தது. பொதிகையில் புத்தத் துறவிகள் தியானம் செய்ததை மணிமேகலையும், பௌத்தர்கள் பௌத்த பள்ளிகளைப் பயன்படுத்தினர் என்று குறுந்தொகையும், சிதலடைந்த பௌத்த விகாரம் இருந்ததை அகநானூறும், சிதலடைந்த கோயில்கள் இருந்தன என்றும் புறநானூறும் விவரித்துள்ளன.
புத்த மதம் தமிழ்நாட்டில் வீழ்ச்சியடைந்த பின், அகத்தியருக்கு தமிழ் கற்றுக்கொடுத்த அவலோகிதாவின் இறப்பிடம், பின்நாளில் அகத்தியரின் இருப்பிடமாக மாறியது என்று அறியப்படுகிறது. அவலோகிதரிடம் அகத்திய முனிவர்வ தமிழ்மொழியைக் கற்றார் என்பதை அறிவிக்கும் வீரசோழிய நூலாசிரியர் புத்தமித்தரர்
பாடலைக் கீழே காணலாம்.
'ஆயுங் குணத்துவ லோகிதன் பக்கங் அகத்தியன் கேட் டேயும் யுவனிட் கிளம்பிய தண்டமிழ்" (பாயிரம்-2
பொதிகையில் மேலும் பல ஆய்வுகள் மேற்கொண்டால், புத்த மதத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளிவரும் என்பது உண்மையாகும்.
Reference
பாண்டி மண்டலத்தில் பௌத்தம் எனும் ஆய்வு நூலிலிருந்து.
Comments
Post a Comment