தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கிய நல்லூர் இது.

 ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ளது தெற்கு காரசேரி. தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கிய நல்லூர் இது. இந்த கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் #குலசேகர_நாதர் என்றும் இறைவியார் 
#குலசேகர_நாயகி என்றும் அருள்பாலிக்கிறார்கள்.குலசேகரப் பட்டணத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் ஒரே நேரத்தில் 9 சிவன் கோயில்கள் கட்டினார். அக்கோயில்களில் ஒரே நேரத்தில் பூஜை செய்து மகிழ்ந்தார். குலசேகரபட்டிணத்தில் இருந்து திருவாங்கூர் வரை இந்த 9 கோயில்களும் அமைந்திருந்தன. அந்த ஒன்பது கோயில்கள் வரிசையில் இதுவும் அடங்கும்கோயிலில் சிவ பெருமான் கிழக்கு நோக்கிச் சற்று இடது புறம் சாய்ந்து பக்தர்கள் கோரிக்கையைக் கேட்கும் விதமாகக் காட்சியளிக்கிறார். அம்மை குலசேகர நாயகி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். குலசேகர_மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்னை வரும் போதெல்லாம் இக்கோயிலில் வந்து வணங்கித்தான் வெற்றி பெற்றுள்ளார். வெற்றியைப் பெற்றுத் தரும் தலமாக இது விளங்கி வருகிறது.

Comments

Popular posts from this blog

வலையல் வியாபாரிகளான லம்பாடியர்

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

இந்த இடத்தின் பெயர் RIDGE POINT.