திருக்குறுங்குடி.....திருநெல்வேலில இருந்து 45 கிலோமீட்டர், கன்னியாக்குமரியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்துல இருக்கும் ஒரு சின்ன ஊர்.முழுக்க முழுக்க விவசாயம்தான் ஊரோட பிரதான தொழில். ஊர சுத்தி நெல் வயலும், வாழைதோப்பும் தான்.. கொடுமுடியாறு அணை, ஆறு, குளம், கால்வாய் என ஊரே பசுமையாய் காட்சி தருகிறது.நல்ல அகலமான தெருக்களுக்கு நடுவுல இருக்கு "அழகிய நம்பிராயர் கோவில்"கோவில் முழுக்க கல்தூண்கள், கற்கள் கொண்டு எழுப்பப் பட்டதால், எவ்வளவு வெயில் அடித்தாலும் கோவில் உள்ளே குளுமையாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்கிறது.30 அடி உயர மதில்சுவர், தெப்பகுளம், கோவில் உள்ளே 20 அடி ஆழத்தில் நீர் ததும்பும் கிணறு என மிகப்பெரும் உள்கட்டமைப்பு வசதியோட கோவில் வடிமைக்கப்பட்டுள்ளது.கோவில் என்பது மதத்தை பற்றி மட்டும் சொல்லாமல் அந்த கால மக்களின் திறமை பண்பாடு, அறிவியல், உறவுமுறை, வாழ்வியல் என பல விஷயங்கள அந்த கோவில் சிற்பங்கள் பேசுது..சாமி சிலைகளை விட சாதாரண குடிமக்கள் சிற்பங்கள்தான் அதிகம்.குறவப்பெண், அரக்கன், முனிவர், போர்வீரன், பணிப்பெண் என சமகால சரித்தித்தை சொல்கிறது. மனிதர்கள் மட்டுமின்றி...