பூலித்தேவருடன் போரிட்டவர்கள் களமும்-தலமும்.
பூலித்தேவருடன் போரிட்டவர்கள் களமும்-தலமும்.
1. ராபர்ட் கிளைவ்.-
ஆண்டு: 1750. இடம்: திருச்சி.
( 1751 ல் கேப்டன் இன்னீஸ் வரி வசூல் செய்ய திருநெல்வேலி வந்து பூலித்தேவர் போன்ற பாளையக்காரர்கள் ஒற்றுமையைக் கண்டு ஏதும் செய்ய இயலாதவனாய் திரும்பியதை District manual of Tinnevely பதிவு செய்துள்ளது)
2. கர்னல் ஹெரான்.
ஆண்டு: 1755. இடம்: நெற்கட்டான் செவல் கோட்டை.
3.மாபூஸ்கான் ( ஆற்காட்டு நவாப் முஹம்மது அலி சகோதரன்)
ஆண்டு: 1755, இடம்: களக்காடு கோட்டை.
4. ரஹீம் ( ஆற்காட்டு நவாப் இளைய சகோதரன் மாபூஸ்கானின் தம்பி)
ஆண்டு: 1756, இடம் : ஸ்ரீ வில்லிப்புத்தூர் கோட்டை.
5. 1756 மார்ச்சு மாதம் 21 ம் தேதி மாபூஸ்கான் மற்றும் பொல்லாப்பாண்டிய கட்டபொம்மன் கூட்டணி. இடம்: திருநெல்வேலி. ( இப்போரில் பூலித்தேவரின் இஸ்லாமிய படைத் தலைவன் முடோமியா இறந்தான்)
6. 1756 ல், நபி-கான் கட்டாக் எனும் ஆற்காட்டு நவாப் படைத்தலைவனும், நவாப்பின் பிரதிநிதியான பரக்கத்துல்லா வும், நவாப்பின் சகோதரன் மாபூஸ்கானும் பூலித்தேவரிடம் போரில் சரணடைந்தனர். இடம்: ஸ்ரீ வில்லிபுத்தூர் கோட்டை.
7. கான் சாஹிப் எனும் முஹம்மது யூசுப் கான் .
ஆண்டு: 1757 March 5. இடம்: ஆழ்வார் குறிச்சி. ( இப் போரினால் வடகரை மன்னர் சின்னணஞ்சாத்தேவர் தனது கால் ஒன்றை இழந்தார்)
6. மீண்டும் இரண்டு வருடம் கழித்து 1759 November 6 யூசுப் கான் நெற்கட்டான் செவ்வலைத் தாக்கினான். (ஓரு மாதம் ஓயாத போர்- ஓரே நாள் ஓய்வு)
7. யூசுப் கான் & மார்த்தாண்ட வர்மா + பிற தென்னக கிழக்குப் பாளையக்காரர்கள் கூட்டணி.
ஆண்டு:1759 December 4. இடம்: வாசுதேவநல்லூர் கோட்டை. ( இங்கும் ஒரு மாதப் போர். இங்குதான் மறவர் கொடுத்த வளரிப் பிரசாதத்தை அனைவரும் உண்டுவிட்டு ஓடினர்😂)
8. 1760 January 28. இடம்: வாசுதேவநல்லூர் கோட்டை.
கான்சாகிப்+ திருவிதாங்கூர்
9. 1761 May . இடம்: வாசுதேவநல்லூர் கோட்டை. கான்சாகிப்+ திருவிதாங்கூர்+ சேதுபதி+ தொண்டைமான்+ சிவகங்கை (நாலு கோட்டை) கௌரியர்+ திருச்சி படை+ மதுரை படை+ கூலிப்படை.
10: 1766 October. இடம்: வாசுதேவநல்லூர் கோட்டை. கவர்னர் டிகாட் வழிகாட்டுதலில், கேப்டன் டிவிண்டர்+ மேஜர் லாரன்ஸ்+ கேப்டன் பௌட்ஸன் & இங்கிலாந்து ராணுவம்+ நவாப் படை.
11. 1767 may 13. இடம்: வாசுதேவநல்லூர் கோட்டை.
கேப்டன் டொனால்ட் கேம்பல்+ மேஜர் பிளிண்ட் + கேப்டன் காப்பர் + மேஜர் பீட்டர் டேவிட்ஸன் & இங்கிலாந்து ராணுவம்+ நவாப் படை. சிற்றரசர்கள்+ பாளையக்காரர்கள் கூட்டணிப் படை.
[இதில் இரண்டு போர்கள் விடுபட்டுள்ளன. சரியான ஆண்டு மற்றும் தேதி தெரியவில்லை என்பதால் அதை அடுத்து ஆய்வு செய்து எழுதுகிறேன்]
இத்தனை பேர் படையெடுத்தது எங்கள் வரகுணராம சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவனின் மீது. இத்தனை பேரையும் பலமுறை ஓடவிட்டு அடித்தது....
பூலித்தேவர் + சின்னணஞ்சாத்தேவர் + வாண்டையாத்தேவர்+ சேதுராயர்+ சேவுகபாண்டியர்+ இந்திரத் தலைவர்+ மருதப்ப பாண்டியர்+ பூலோகத் தலைவர்+ தீர்த்தபதி கூட்டணிப் படை.
பூலித்தேவர் பிறந்தது 1715. September 1. தனது 11 வயதில் ...
1726ல் பட்டம் சூட்டப்பட்டு மன்னரானார். 1767 வரை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதில் தனது 35வது வயதிலிருந்து, அதாவது பட்டத்திற்கு வந்த 24 வருடங்களில் தொடங்கி, 1750 ல் துவங்கி 1767 வரை 17 வருடங்கள் கடுமையான போர்க்களங்கள் இடையிடையே சிறிது ஓய்வு என்று வாழ்ந்து இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பெரும் போர்வீரராக வாழ்ந்து மறைந்தார்.
நூல் உதவி:
மாமன்னன் பூலித்தேவன். /ந.ராசையா-2007.
நட்புடன்,
முனைவர் ஜோ அருண்
வெய்கை உயர்கல்வி மற்றும் ஆய்வு மையம்
Comments
Post a Comment