சிந்து எழுத்து முத்திரைகளைப் படித்தறிதல்
சிந்து எழுத்து முத்திரைகளைப்
படித்தறிதல் .
சிந்து நாகரிக நகரங்களின் அகழ்வாய்வு தொடங்கி நூறாண்டு கள் கடந்த நிலையில் அச்சிந்து நாகரிகத்திற்குரிய எழுத்து முறை யான சிந்து எழுத்தை இன்னும் படிக்க முடியவில்லை என்று பலர் கூறுகின்றனர் என்று எனது முன் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . மேலும் அதற்குக் காரணம் உலக ஆய்வாளர்கள் உரிய தமிழறிவு அற்றவர்களாக இருப்பதும் , சிந்து எழுத்து வடிவங்கள் யாவும் படவுரு வகையிலான படவுருவன்களால் ஆன சொல் வடிவங்கள் வகைப் பட்டது ( Logographic word signs) என்ற முன்கருதுகோளை உருவாக்கிக் கொண்டு ஆய்வைத் தொடங்குவ தாலுமே என்று குறிப்பிட்டு எழுதி இருந்தேன் . நீங்களும் என்கருத் தினை ஏற்று பேராதரவு தந்தீர்கள் .
மேலும் , நுணுகி ஆராய்ந்து என் பதிவுகளைத் தொடரும் ஆய்வாளர் களும் , எனது மாணவர்களும் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளனர் . சிந்து எழுத்தில் படவுருக்களால் ஆன முத்திரைகளை எடுத்துக் காட்டி விளக்குமாறு என்று கேட்டுக் கொண்டனர் . இங்கு நான் காட்டும் முத்திரை படவுருவன்களு டன் ஒலிநிலை Phonetic எழுத்துகள் விரவி எழுதப்பட்டது . இந்த முத்தி ரையைப் படித்தாலே ஒலிநிலை யான எழுத்துகளை அறிமுகம் செய்த சிந்துத் தமிழர் எதற்காக அதனுடன் படவுருக்களையும்கூட சேர்த்து எழுதினர் என்று எளிதாக உணர்ந்து கொள்ள முடியும் .
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன . அவை (1) தாங்கள் தங்கள் ஒலிநிலை எழுத்தைக் கண்டுபிடிக்குமுன் பலகாலம் பயன்படுத்தி வந்த முந்தைய எழுத்து முறையான பட எழுத்து களைக் கைவிட மனம் வராத உடைமையுணர்வு . ( 2 ) மிகச்சிறு முத்திரை இடத்தில் நிறைந்த எழுத்துகளுடன் கூடிய சொற்களை எழுத வேண்டியுள்ளதால் பல எழுத்துகள் கொண்ட அச்சொற் களை ஒரே ஒரு வடிவமாக எழுத வசதியாகப் படவுருவன் சொல் வடிவங்களை இணைத்துப் பயன் படுத்திக் கொண்டனர் . எ - டு : கோயில் , மலய் என்று மூன்று எழுத்துகள் கொண்டு எழுத வேண் டிய சொற்களை ஒற்றைப் படவுரு வங்களில் எழுதினர் . ( 3 ) சிந்து ஒலிநிலை எழுத்து முறையில் கு , து , கோ , லை , செ , சோ போன்ற உயிர்மெய் எழுத்துகளைக் கொண் டுள்ள சொற்களையும் , உ ஊ , எஏ , ஒஓ முதலான உயிரொலிகளை யும் எழுத முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை . ஆகவே , இத்தகைய உயிர் , உயிர்மெய் எழுத்துகள் கொண்ட சொற்களை எழுத முடியாததால் அத்தகைய எழுத்துகளுள்ள சொல் வடிவங்கள் கொண்ட படவுருக்களைத் தொடர் களில் இணைத்து எழுதினர் . அதற்குத் தங்கள் முந்தைய பட எழுத்து Logographic வடிவங்களை எடுத்தாண்டனர் .
சிந்து ஒலிநிலை எழுத்து ஒலிநிலையான வடிவங்கள் 75 % அளவும் , பிற வடிவங்களான பட வுருக்கள் , குறியீடுகள் , எண்கள் ( Logogrphs , Symbols and Numerals) ஆகியவற்றாலான சொல் வடிவங் களைப் பயன்படுத்தி 25 % வடிவங் களையும் அமைத்து சிந்துத் தமிழ் மக்கள் தங்கள் தமிழ் மொழிக்கு அத்தொல்பழங் காலத்திலேயே உலகின் மிக உயரிய எழுத்து முறையை உருவாக்கினர் . சிந்து நாகரிகம் கிமு1750 அளவில் அழிந் திராது போயிருந்தால் உலகின் முதன்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ் மொழியைத் தந்த மக்கள் , உலகின் முதல் உயர் ஒலிநிலை எழுத்தைத் தந்தவர் என பெருமை யையும் பெற்றிருப்பர் .
சிந்து எழுத்து அன்றைக்கும்கூட உயரிய எழுத்து முறைதான் . உலக எழுத்து முறைகளாக அதன் காலத் தில் விளங்கிய சுமேரிய , எகிப்து எழுத்து முறைகளைவிட முன்னேறி ய எழுத்துமுறையே . எகிப்திய எழுத்து மட்டும் பிற்காலத்தில் கிமு 1700 அளவுக்குப் பிறகு எழுத்து ஒலிகளுக்குப் படங்களை எழுத்து வடிவ மாகக் கொண்ட அகரமுதலி யையும் ( Alphabet ) , இரண்டு மூன்று எழுத்துகளையும் கொண்ட கூட்டெழுத்து வடிவங்களையும்கூட கொண்டிருந்தது . சிந்து எழுத்தைப் போலவே எகிப்திய எழுத்தும் படவுருவன் எழுத்தையும் , ஒலிநிலை எழுத்தையும் கலந்து எழுதும் முறையைப் பெற்றிருந்தது ஆனால் , இத்தகைய ஒலிநிலை எழுத்தைப் பெற்றிருந்தாலும்கூட அதனை மொழியில் எவ்வாறு பயன்படுத்துவது என்று எகிப்தியர் அறிந்திருக்கவில்லை என்று உலக நாகரிக எழுத்து முறைகளை நன்கு ஆராய்ந்த தொல்லெழுத்து ஆய்வா ளரான டேவிட் திரிங்கர் தமது புகழ்பெற்ற Alphabets என்ற நூலில் கூறுவார் . எகிப்தியரும் படவருவன் + கூட்டெழுத்துகளைப் பயன்படுத்தினர் .
எகிப்திய மொழியில் தொட் என்றால் ஒரு கொக்கு வகையாகும் அவர்கள் தொட் + ம + ஸ் என்று ஒலிநிலை எழுத்தை எழுதி தங்கள் மன்னன் பெயரை தொடமோஸ் -- தொட்மோசிஸ் என்று படித்தனர் . ஆனால் இது சிந்து நாகரிக அழிவை ஒட்டிய காலத்தது . படம் காண்க . நாம் இங்கு காட்டும் சிந்து முத்திரை படவுரு + எழுத்துகள் கொண்டது . முத்திரை காண்க :
மொகஞ்ச தாரோ , 2290 .
# ஆ ய்ய ன ட மலய் கோயில் " வி
= வி " கோயில் மலய் தனய்ய ஆ
வி = வியத்தற்குரிய , பெரிய
கோயில் மலய் = மலைக் கோவிலில் உள்ள
டனய்ய = தனய்ய = தனயன் - மகன்
தனய்ய = தனையனது .
ஆ = பசு .
Mohenjo daro , 2290 .
# a: yya na ta malay koyil " vi
= vi " malay ko:yil tanayya a:
= the great " of the lord son God
of the temple hill , a cow .
vi = great , brad
malay = hill , hilly tract
ko:yil = temple , house of a king .
tanayyan = tanayan = young boy , son
a: = cow .
கோயில் மலை = கோயில் மலய் . இறைவனது கோயில் இருக்கும் மலை . மலை மீது கோயில் கொண்ட இறைவன்
தனய்யன் = தனயன் = மகன் . மலை மீது கோயில் கொண்ட மகன் அல்லது சிறுவன் என்றால் அது முருகன் . குறிஞ்சி என்னும் மலை சூழ் பகுதியில் கோயில் கொண்டவன் முருகன் . தமிழ் மொழி இலக்கியங்கள் அவனைச் சேய் என்றும் மகன் என்றும் சிறுவ னென்றும் , குழவி என்றும் கூறி போற்றிப் புகழும் . இத்தகைய மலை மீது கோயில் கொண்ட சிறு வன் Bal பால் -- பாலன் என்று சுமேரியர் இளங்கடவுளைப் பாராட்டுவதை நாமறிவோம் . Bal என்பவனும்கூட நமது பிறை சூடிய சிவன் , மலை மகள் ஆன பார்வதி ஆகியோரின் மகனான முருகன் போல , சுமேரிய பிறைக் கடவுளுக்கும் , மலைமகளான இறைவிக்கும் மகனாவான் . தமிழ் இறைவனான முருகனையும் , முருக வழிபாட்டையும் தமிழர் குடியேறி நாகரிகம் கற்பித்த சுமேரியாவிற்கு கிமு 4500 அளவில் தம்முடன் கொண்டு சென்றனர் . எனவே முருக வழிபாடு பண்டை நாகரிக உலகமெங்கும் பரவியது . அங்கும் முருகன் குழந்தைக் கடவு காகவே , சிறவனாகவே ( Bal பால ) அறிமுகமாகிறான் .
தமிழ் இலக்கியங்கள் முகனை மகனாக ( தனையன் ) , சிறுவனாக வே போற்றுகின்றன . நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் அவன் இளமை குறித்தே பேசுவார் . வரிகள் 255 -- 259 .
" ஆல்கெழு கடவுட் புதல்வ
மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர்
கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை
சிறுவ
இழையணி சிறப்பிற்
பழையோள் குழவி "
என்று புதல்வ , மகனே , சிறுவ , குழவி என்றெல்லாம் பாடுவார் . இவற்றின் பொருள் தனயன் , இளயோன் என்ற பொருளுடை யன .
இத்தகைய சிறப்புடைய சிந்து எழுத்து முத்திரை ஒலிநிலை எழுத் து வடிவங்களோடு , அதற்குத் துணையாகப் படவெழுத்துகளை யும் கொண்டு விளங்குகின்றன . படிப்பதில் எத்தகைய துன்பம் , சிக்கல் இல்லை . இன்றைய தமிழ் போல எளிதாகப் படிக்க முடிகிறது . இதன் வாயிலாக கிமு 2500 அளவி லுருவான மிகமுன்னேறிய சிந்து நகர நாகரிக எழுத்தையும் , அதற்கு முன்பு பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கிலிருந்த படவுருவன் எழுத்து களையும் ஒப்பிட்டு நம்மால் அறிய முடிகிறது . இதனால் தமிழும் பல ஆயிரம் ஆண்டுகள் எழுத்துமுறை யைப் பெற்றிருந்த எகிப்திய , சுமே ரிய எழுத்து முறைகளைப்போல் தனக்கென எழுத்து முறையைப் பெற்றிருந்தது என்பது உறுதி . இது நமக்குப் பெருமை சேர்க்கும் செய்தி தானே.
Comments
Post a Comment