உலகின் முதல் எழுத்து முறை
மனித வரலாற்றில் சுமேரியர்களே முதன்முதலில் எழுத்து முறையை கிமு 4000 - கிமு 3000 காலத்திலிருந்து கண்டுபிடித்து பயன்படுத்தினர் என்று பொதுவான கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
வட கிரேக்கத்தில் கஸ்டோரியா ஏரிப்பகுதியில் உள்ள டிஸ்பிலியோ என்ற புதிய கற்கால வாழ்விடத்தில் கிடைத்த ஒரு மரத்துண்டு எழுத்தின் வரலாற்றை மாற்றி அமைத்திருக்கிறது.
1932 முதலே அடையாளம் காணப்பட்ட இந்த தொல்லியல் இடத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு தொல்லியலாளர் George Xourmouziadis என்பவர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தினர்.
அந்த ஆய்வில் 7000 முதல் 8000 ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்த கருவிகள், பாண்டங்கள், உருவங்கள் மற்றும் ஆபரணங்கள் என ஏராளமான கலைப் பொருட்கள் கிடைத்தன.
அவற்றில் டிஸ்பிலியோ பலகை என்று பெயர் பெற்ற மரத்துண்டு அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக் குறியீடுகளால் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இதுவரை அறியப்படாத ஒரு வகை எழுத்துக் குறியீடுகள் அந்தப் பலகையில் எழுதப்பட்டிருந்தன.
ரெடியோகார்பன் டேட்டிங் முறையின் இதன் காலத்தை கணித்தபோது துள்ளியமாக 7280 ஆண்டுகளுக்கு முந்தையது (கிமு 5260) என்று தெரிய வந்திருக்கிறது.
இந்த எழுத்து வடிவம் கிரேக்க மைசீனியன்கள் பயன்படுத்திய பண்டைய Linear B எழுத்து முறைக்கு ஓரளவு ஒத்திருக்கிறது.
இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற பீங்கான் சில்லுகளிலும் இதே போன்ற எழுத்துக் குறியீடுகள் காணப்பட்டன.
இந்த மரத்துண்டுப் பலகை பல்லாயிரம் ஆண்டுகளாக தண்ணீருக்கடியில் புதைந்திருந்ததினால் சிதைவடையாமல் பாதுகாக்கப்பட்டிருந்திருக்கிறது. அதன் இடத்திலிருந்து எடுத்த சில காலத்திலேயே நிறைவடைய ஆரம்பித்துவிட்டது. தற்போது அறிவியல் தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை. ஒப்பீட்டுப் பார்த்து புரிந்து கொள்ளும் அளவிற்கு ஏதேனும் இரு மொழி எழுத்துக்களைக் கொண்ட ஆதாரம் கிடைக்காதவரை அதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவு என்றே கருதுகின்றனர்.
Comments
Post a Comment