Posts

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

Image
  மீனா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகின்றார். இவர் தன் தாய் லட்சுமி அவர்களுடன் நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றுள்ளார். அந்த கோயிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தின் அதிட்டானப் பகுதியின் பட்டிக்குக் கீழே ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். பின்னர் அதனைப் படி எடுத்து வாசித்துள்ளார். முதல் வரியில் “சேர” என்ற வார்த்தையும் இரண்டாவது வரியில் “மொழிந்தருளி” என்றும்; அடுத்த வரியில் “விளக்குச் செல்வதாக’ எனவும்; நான்காவது வரியில் “இவ்வூர் நாலஞ்சேரி” எனவும்; கடையில் வரியில்”இவ்வூர்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. இதனைப் படித்த பேராசிரியர் முருகன் மற்றும் மதிவாணன் “இந்தக் கல்வெட்டின் முழுத் தகவலும் கிடைக்கவில்லை எனவும், இக்கல்வெட்டு இடைக்காலத் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டுள்ளன எனவும், முதல் இரண்டு வரிகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில் “கொடை அளிக்கும் முன்பு அரசரால் நேரடியாக ஆணையிடப்பட்டதையும், மூன்று மற்றும் நான்காவது வரிகளின் மூலமாக “நான்கு சேரிகள் உள்ளதையும் இந்தக் கல்வெட்...

நானாதேசி-திசையாயிரம்-திருமஞ்சனக் கிணறுகள்-குடிநீர் கிணறுகள்

Image
தூத்துக்குடி மாவட்டம், மடத்தூர் நெடுஞ்சாலை அருகே "பங்கய மலராள் கேழ்வன்....." என்று தொடங்கும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 790 ஆண்டுகள் பழமையான கிணற்றுடன் கூடிய, மங்கலச் சொற்களுடன் பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.  "தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில், பண்டைய காலத்தில் நிலவி வந்த பல்வேறு வணிகக் குழுக்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றில் நானாதேசி என்போர், எல்லா நாடுகளுக்கும் கடல் வழி மற்றும் தரைவழியாகச் சென்று வணிகம் செய்தவர்களாகவும், திசையாயிரம் என்போர் எல்லாத் திசைகளுக்கும் சென்று வணிகம் செய்வோராகவும் வாழ்ந்துள்ளனர். இத்தகைய வணிகக் குழுவினர், தங்களுக்கென பாதுகாப்பு வீரர்களையும் கொண்டிருந்தனர். மேலும், பிராமணர்களுக்கு தானமாக ஒரு ஊரினை மங்கலம் என்ற பெயரில் உருவாக்கி கொடுத்து, அதன் காவல் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு உள்ளதையும் அறிய முடிகிறது. இக்குறிப்பிட்ட கமலைக் கிணற்றின் கீழ்பகுதியில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு (கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை) கி.பி.1234-இல் உள்ள 20 வரிகளைக் கொண்டுள்ளது. அதன் முன்பு 7 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும்...

குற்றாலநாதர் கோயிலில் உள்ள 2 செப்பேடுகள் அழகன்பெருமாள் பாண்டியன், சீவல வரகுணராம பாண்டியன் ஆகியோர் பெயரில் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட சாயரட்சை கட்டளை குறித்து பேசுகின்றன.

Image
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயில் - 5 பழமையான செப்புப்பட்டயங்கள்.  தற்போது இந்த சுவடிக் குழுவினர் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் இருந்த 5 புதிய செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்துள்ளனர். அச்செப்புப் பட்டயங்களைப் படி எடுத்து நான் ஆய்வு செய்தபோது, செப்புப்பட்டயங்களில் 2 செப்புப்பட்டயங்கள் அழகன் பெருமாள் பாண்டியன் மற்றும் சீவல வரகுணராம பாண்டியன் ஆகியோர் பேரில் குற்றாலநாதர் சுவாமிக்கு சாயரட்சை கட்டளை வழங்கியது குறித்த ஒரு செப்புப்பட்டயம். அதில் அசாதுவாலா சாய்பு, இசுமாலிராவுத்தர் முதலான பலர் குற்றாலநாதர் சுவாமிக்கு நித்திய விழா பூசை கட்டளைக்கு தானம் வழங்கியது குறித்தும் கூறுகின்றன. மீதமுள்ள மூன்று செப்பேடுகளில் ஒரு செப்பேட்டில் திருஞானசம்பந்தர் திருக்குற்றாலம் குறித்துப் பாடிய திருப்பதிகப் பாடல்கள் 11 அமைந்து காணப்படுகின்றன. மற்றொரு, செப்பேட்டில் திருநாவுக்கரசர் பாடிய திருஅங்கமாலை பதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் 12 பாடல்கள் அமைந்து காணப்படுகின்றன. இறுதியில் குமரகுருபர சுவாமிகள் எழுதிய ஒரு பாடல் காணப்படுகிறது. இப்பட்டயம் கி.பி 1959ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இறுதி...

காப்பாற்றப்பட வேண்டியது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டும் அல்ல.‌ கடந்த காலமும் தான்.

Image
கட்டுக்கதைகள் கலக்காத இந்தியத் துணைக்கண்ட வரலாற்றை நேர்த்தியாக சுடப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களிலும் "ஆறு கிடந்தன்ன அகனெடுந் தெருக்களிலும் "தான் தொடங்கவேண்டும்.‌  யாருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ அத்தகைய நகர்மய வாழ்வியலின் தரவுசார்ந்த உச்சம் ஹரப்பா மொகஞ்சதாரோவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு. இந்தியத் துணைக்கண்டத்தின் இத்தகைய நகர்மய வாழ்வியல் பற்றிய துல்லியமான ஆவணப்பதிவு,  யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் "செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசைகளை" கொண்டாடிய;  " இருபால் பெயரிய உருகெழு மூதூர்" என்று நகர் வடிவமைப்பு பேசிய, தென்கோடித் தமிழ்நாட்டின் சங்கத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் தான் உள்ளன. இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே.  இவை இரண்டிற்குமான காலம், தூரம் என்ற இருபரிமாண இடைவெளி புதிய அகழாய்வுத் தரவுகளால் சங்க இலக்கியங்களின் புத்தொளி மீள்வாசிப்பால் காணாமல் போகும் அல்லது சுருங்கும். ஹரப்பா, மொகஞ்சதாரோ, தோலாவீரா, லோத்தல், தைமாபாத், ஆதிச்சநல்லூர் சிவகளை கொற்கை அழகன்குளம் கொடுமணல் கீழடி இல்லாத இந்தியத் துணைக்கண்ட வரல...

ஒரு படையுடன் வணிகம் செய்யும் வணிகர்களுக்கும் போர்க் கலையை கற்க தேவை இருந்தது. எனவே அவர்கள் வீர வணிகர் ஆயினர்.

Image
உள்நாட்டிலேயே வணிகம் பார்க்கும், நிலை வணிகர்களுக்கு அரசரின் உள்நாட்டு காவலும், பாதுகாப்பும் கிடைத்தது. ஏற்றுமதி இறக்குமதி வாணிகத்தில் நகர்ந்து கொண்டே  வணிகம் பார்க்கும் சாத்து வணிகர்களுக்கும், அதே பண்புடைய பிற்கால ஐநூற்றுவ வளஞ்சியர்களுக்கும் எல்லா இடங்களிலும் ஒரே அளவு பாதுகாப்பு கிடைக்குமா என்றால் கிடைக்காது, எனவே தனிப் படை பாதுகாப்பு தேவைப்பட்டது. வாணிகச் சாத்தர் அயல்நாடுகளுக்கு வாணிகஞ் செய்யப் போகும்போது கூட்டமாகச் சேர்ந்து போனதுமல்லாமல் தங்களோடு படை வீரர்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். வாணிகச் சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன, மருதன் இளநாகனார், பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைக் கூறுகிறார், 'மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில் செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை வல்வில் இளையர்.' வழிப்பறிக் கொள்ளயிட்ட வில் வேடரைக் கூறுகிறார். 'சாத்தெறிந்து அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர்.' (அகம், 167: 7-9) சங்க இலக்கியம் சாத்து என்றாலே படையோடு நடைபெறும் வணிகம் சென்று பொருள் கூறியது. வணிகர்க்குப் பாதுக...

பெரும்பாணாற்றுப்படையில் சாத்து வணிகம் பற்றி சில முக்கிய குறிப்புகள் வருகின்றன.

Image
 சாத்து என்ற சொல்லுக்கு நிலவழி வணிகம் என்று பொருள் வடமொழியில் சார்த்தவாஹா என்றும் இது அழைக்கப்படுகின்றது. Support us by Keep Sharing the post, and Buy History Related Books from us.பண்டைக் காலத்தில் வணிகம் இரண்டு வகை நடைப்பெற்றது. ஒன்று நிலவழியில் மற்றொன்று கடல் வழியில். கடல் வழியில் நடைபெற்ற வணிகத்துக்கு முந்நீர் வழக்கம் என்றும் ஒரு அடைமொழி பெயர் உள்ளது. முந்நீர் என்ற சொல்லுக்கு பல பொருள் இருந்தாலும், தென்னகத்தை சுற்றி இருக்கும் மூன்று கடல் என்ற பொருளும் அல்லது மூன்று வழிகளில் உருவான  நீரால் உருவான கடலில் நடைபெறும் வணிகம் என்றும் சிலர் பொருள் பொருள் கூறுகின்றர்.இந்திய நிலப்பரப்பு முழுவதும் நடைபெற்ற உள்நாட்டு வணிகமானது தரைவழி வழியும் வாணிகத்தையே மிகவும் நம்பியிருந்தது. சில நேரங்களில் குஜராத் பகுதியிலிருந்து தென்னகத்திற்கும் கப்பல் வழியாகவும் வணிகங்கள் நடைபெற்றதாக இலக்கிய வரலாற்று தகவல்கள் நமக்கு கூறுகின்றன.இந்த சாத்து வணிகர்கள் தங்களின் வணிக பொருட்களை எடுத்துச் செல்லும்.வழிகளுக்கு பெரு வழிகள் என்று பெயரிட்டனர். பெருவழிகள் பெரும்பாலும் வணிக பொருட்களை ஏற்றிச் செல்லும...

சமூக அறிவியல் மன்றம் துவக்க விழா

தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரம் மாதா பட்டணம் சற்குண சத்திய வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் துவக்க விழா இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி அமிர்த சிபியா அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றி சிறப்பித்தார்கள். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு தங்கராஜன் அவர்கள் முன்னிலை வகித்து சமூக அறிவியல் மன்ற துவக்க விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினார்கள். சமூக அறிவியல் மன்றத்தில் சூரிய குடும்பம் பற்றி மாணவி ஜியாஷ்னி பேசினார். அப்துல் கலாம் பொன்மொழிகளை மாணவி காவியா கூறினார். வீரமங்கை வேலு நாச்சியார் பற்றி ஏஞ்சல் பேசினார் .மாணவர்கள் கணேஷ் மற்றும் மாதேஷ் இருவரும் சேர்ந்து இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார் . சொர்னேஷ்மற்றும் மாதேஷ் இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டின் மாநில சின்னங்களை பற்றி பேசினர் .மாணவி ரேஷ்மா தலைவர்கள் பற்றிய கவிதை கூறினார். மாணவி அஸ்மிதா தேசியக்கொடி பற்றிய பாடல் ஒன்று பாடினார். மாணவன் சாரதி சந்திராயன் 3 திட்டத்தை பற்றி பேசினார. மாணவன் சஞ்சய் வரலாற்று முக்கியத்துவம் ம...