சமூக அறிவியல் மன்றம் துவக்க விழா

தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரம் மாதா பட்டணம் சற்குண சத்திய வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் துவக்க விழா இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி அமிர்த சிபியா அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றி சிறப்பித்தார்கள். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு தங்கராஜன் அவர்கள் முன்னிலை வகித்து சமூக அறிவியல் மன்ற துவக்க விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினார்கள். சமூக அறிவியல் மன்றத்தில் சூரிய குடும்பம் பற்றி மாணவி ஜியாஷ்னி பேசினார். அப்துல் கலாம் பொன்மொழிகளை மாணவி காவியா கூறினார். வீரமங்கை வேலு நாச்சியார் பற்றி ஏஞ்சல் பேசினார் .மாணவர்கள் கணேஷ் மற்றும் மாதேஷ் இருவரும் சேர்ந்து இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார் . சொர்னேஷ்மற்றும் மாதேஷ் இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டின் மாநில சின்னங்களை பற்றி பேசினர் .மாணவி ரேஷ்மா தலைவர்கள் பற்றிய கவிதை கூறினார். மாணவி அஸ்மிதா தேசியக்கொடி பற்றிய பாடல் ஒன்று பாடினார். மாணவன் சாரதி சந்திராயன் 3 திட்டத்தை பற்றி பேசினார. மாணவன் சஞ்சய் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தற்போது நடந்து முடிந்த ஜீ 20 மாநாடு முக்கியத்துவம் பற்றி பேசினார். மாணவன் ஆல்வின் நமது தேசத்தந்தை காந்தியடிகள் பற்றி பேசினார் .மாணவி மகேஸ்வரி தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய புரட்சியாளர்களை பற்றி பேசினார். மாணவி ஹரிணியின் தலைமையில் துரித உணவு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. சமூக அறிவியல் மன்ற மாணவ மாணவியர் விழாவின் துவக்கம் முதல் நன்றியுரை வரை தொகுத்து வழங்கினர்.  பள்ளியின் வரலாறு பட்டதாரி ஆசிரியர் அருண் அவர்கள் கோவில்கள் பற்றி பேசினார். விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்த மாணவ மாணவியருக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் திரு குற்றாலிங்கம் அவர்கள் திருமதி பொன்மலர் தேவி அவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் திரு கலைச்செல்வன் அவர்கள் திருமதி ஹேமலதா அவர்கள் உடற்கல்வி இயக்குனர் திருமதி ராஜலட்சுமி அவர்கள் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்கள். இவ்விழா ஏற்பாட்டினை வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி தமிழரசி அவர்கள் திருமதி ஜெயராணி அவர்கள் ஒருங்கிணைத்து பரிசுகள் வழங்கி விழாவினை சிறப்பாக வடிவமைத்து வழி நடத்தினார்கள்.

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.