Posts

Showing posts from December, 2022

தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கிய நல்லூர் இது.

Image
 ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ளது தெற்கு காரசேரி. தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கிய நல்லூர் இது. இந்த கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் #குலசேகர_நாதர் என்றும் இறைவியார்  #குலசேகர_நாயகி என்றும் அருள்பாலிக்கிறார்கள். குலசேகரப் பட்டணத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் ஒரே நேரத்தில் 9 சிவன் கோயில்கள் கட்டினார். அக்கோயில்களில் ஒரே நேரத்தில் பூஜை செய்து மகிழ்ந்தார். குலசேகரபட்டிணத்தில் இருந்து திருவாங்கூர் வரை இந்த 9 கோயில்களும் அமைந்திருந்தன. அந்த ஒன்பது கோயில்கள் வரிசையில் இதுவும் அடங்கும்கோயிலில் சிவ பெருமான் கிழக்கு நோக்கிச் சற்று இடது புறம் சாய்ந்து பக்தர்கள் கோரிக்கையைக் கேட்கும் விதமாகக் காட்சியளிக்கிறார். அம்மை குலசேகர நாயகி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். குலசேகர_மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்னை வரும் போதெல்லாம் இக்கோயிலில் வந்து வணங்கித்தான் வெற்றி பெற்றுள்ளார். வெற்றியைப் பெற்றுத் தரும் தலமாக இது விளங்கி வருகிறது.

Nmms-Social Science Guide

NMMS SOCIAL SCIENCE GUIDE

துண்டுபோட அப்பாறையில் குழிகள் போட்டு கம்புகள் நட்டு நீர் ஊற்றி பாறையின் விரியும் திறனை சோதிப்பார்கள்.

Image
ஒரு குடவறை ஒன்று அமைக்க முதலில் சரியான பாறையைத் தேர்வு செய்வார்கள். அப்பாறையின் தாங்குதிறனை பரிசோதிக்க .. அந்த நீண்ட பாறையின் ஓரத்தில் 4 × 4 அளவு சதுரப்பரப்பை  வெட்டி குடைந்துப் பார்ப்பார்கள்..  அப்பாறையை துண்டுபோட அப்பாறையில் குழிகள் போட்டு கம்புகள் நட்டு நீர் ஊற்றி பாறையின் விரியும் திறனை சோதிப்பார்கள். இந்த இரண்டு சோதனையிலும் தேர்ச்சி பெறும் அப்பாறைத் தொடர் குடவறை குடையத் தேர்வாகும்.  இப்பரிசோதனை நடந்த தடயங்களை இன்றும் நாம் காணலாம். மதுரை ஆனைமலை நரசிங்கப்பெருமாள் குடவறைக் கோவில் அருகே ..  லாடன் கோவில் என்றழைக்கப்படும் முருகன் குடவறைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குடவரை பாறைத் தேர்வின் சோதனை நடந்த தடம் இன்றும் இக்குடவறைக் கோவிலில் உள்ளது. குடவறையின் ஓரத்தில் ஒரு சிறு சதுரபரப்புக்கு பாறையை குடைந்து பாறையின் தாங்குதிறனை  சோதித்துள்ளார்கள். இக்குடவரையின் முன் உள்ள பாறை ஒன்றில் குழிகள் இட்டு குச்சிகள் நட்டு நீர் ஊற்றி பாறையின் விரிதிறனை சோதித்துள்ளார்கள். இந்த இரண்டு தடங்களையும் இன்றும் நாம் காணலாம். குடவறையின் சிறப்புகள்.. முருகனுக்...

வேட்டையாடிப் பெண்கள்

Image
பெண்கள் வேட்டையாடுவது போல் உள்ள வில் அம்புடன் கூடிய பெண்களின் சிற்பங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக காணக் கிடைக்கின்றன.பண்டைய சமுதாயத்தில் ஆண்கள் வேட்டையாடி உணவுப் பொருளைக் கொண்டு வருவார்கள் என்றும், பெண்கள் ஒரு இடத்தில் தங்கியிருந்து உணவைச் சமைத்து கொடுப்பார்கள் என்றும் பொதுவாகச் சொல்லப்படுகின்றது. இந்தப் பொது சிந்தனையை மாற்றி அமைக்கும் வகையில் அண்மைய ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பு திகழ்கிறது.பெரு நாட்டின் ஆண்டியன் மலைப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில் 9000 ஆண்டுகள் பழமையானது என அறியபப்ட்ட ஒரு எலும்புக்கூட்டினை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். ஒரு வேட்டைக்காரருக்கு உருவாக்கப்பட்ட ஒரு ஈமக்கிரியை பகுதி அது. அந்த எலும்புக்கூட்டின் அருகில் இருந்த வேட்டைக்கருவிகளை ஆராய்ந்த போது இது மிகத் திறமை வாய்ந்த ஒரு வேட்டைக்க்காரரது உடமையாக இருக்கும் என்று கருதினர்.  வேட்டைக்கருவியோடு இணைந்து கிடைத்த 20 கருவிகளும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரரின் படைப்பு என்று கருதினர். நிச்சயமாக இந்த வேட்டைக்காரர் ஒரு முக்கிய வேட்டைக்குழுவின் தலைவனாக இருக்க வேண்டும் என்றும் கருதினார். அதன் பின்னர் எலும்புக்கூட்ட...

ஆழ்வார்குறிச்சி ஊரின் பழைய பெயர் "கொல்லங்கொண்ட பாண்டிய சதுர்வேதி மங்கலம்".

Image
பாண்டிய மன்னன் காலத்தில் இன்றைய திருநெல்வேலி "மேல்வேம்ப நாடு" "கீழ்வேம்ப நாடு" என இரு நாடுகளாக இருந்தத. பொருநை ஆற்றின் கீழ்பகுதி "கீழ்வேம்ப நாடு" என்பதாகும். மேலும் நெல்லைக்கு "சாலிப்பதியூர்" என்கிற பெயரும் இருந்துள்ளது.அரிகேசவனல்லூரின் பழைய பெயர் முள்ளி நாடு.அரிகேசரி எனும் பாண்டியன் பெயரில் உருவானது. மாறந்தை ஊரின் பழைய பெயர் "மாறன்தாயநல்லூர்"பாளையங்கோட்டையின் பழைய பெயர்"ஸ்ரீ வல்லப சதுர்வேதி மங்கலம்" ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லப பாண்டிய தேவர் காலத்தில் உருவாக்க பட்டதாக அறியமுடிகிறது (815-865 AD).இன்றைய களக்காடு வனப்பகுதியின் பழைய பெயர் "கிளாங்காடு"(கிளா - ஒரு வகை மரம்)கடையநல்லூரின் பழைய பெயர்கள் "கடையால்நல்லூர்" "வடவாரி நாடு கடயலூர்" "மருதூர்க்கோட்டை"இலத்தூர் ஊரின் பழைய பெயர் "இலவஞ்சோலை"இன்றைய கங்கைகொண்டானின் பழைய பெயர் "சீவல்லப மங்கலம்" பின் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழவள நாட்டு கீழ்கள கூற்றத்து கங்கைகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம்.மானூரின் பழைய பெயர் "மானவன்நல்லூ...

இரண்டாயிரத்து இருநூறு- முந்நூறு வருடங்கள் முன்பு

Image
மெளரியர் காலத்தில் ( 322 BCE to 185 BCE - இரண்டாயிரத்து இருநூறு- முந்நூறு வருடங்கள் முன்பு) உலகம் முழுவதும் பிரபலமாக இருந்த இருவகை பாண்டிய நாட்டு முத்துகள் - தாம்ரபர்னிகா மற்றும் பாண்ட்யகவாடகா. The different types of pearls were named of the Pandyan landscape in Ancient India: 1) ‘ Tamraparnika’, derived from a place in the Pandya Country, where the river Tamrapani falls into the sea. 2) ‘Pandyakavataka’, derived from Malaykoti hill in the Pandya country. Source: ‘Chandragupta Maurya and His Times, by Dr. R. K. Mookerji