Posts

What were the main administrative functions of the nadus and Kurrams?

The Valanadu was split into several nadus and Kurrams. Inscriptions from the district show that these included Kilvembu nadu (Tirunelveli and Sevalapperi), Melvembunadu (Cheranmadevi and Suttamalli), Thiruvazhuthi Valanadu (Karukkurichi), Mulli nadu (Ambasamudram and Kallidaikurichi), Anma nadu (Cholapuram), Vanavan nadu (Kalakadu), Thannari nadu, and Vadavari nadu (Sankarankoil and Vasudevanallur), along with Arasur nadu (Kayathar). The Kurrams listed are Tirukkanaper Kurram and Milali Kurram. These administrative divisions slowly disappeared after the reign of Kulottunga I ## Administrative Structure of Chola Tirunelveli **Hierarchy of Divisions:** - The Chola empire was organized into a clear administrative hierarchy:   - **Mandalam** (Province)   - **Valanadu** (Commissionary)   - **Nadu** (District)   - **Kurram** (Group of villages; lowest unit)[3][7][8] **Tirunelveli Region Divisions:** - In the Chola period, present-day Tirunelveli was part of Mudikonda Chola...

ஊத்துமலை ஜமீன்

Image
தென்பாண்டிச் சீமையில், மறவர் பாளையங்களின் வரிசையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தது ஊத்துமலை ஜமீன். இராமநாதபுரம் பகுதியின் "கிழுவை" நாட்டிலிருந்து கிளைத்தெழுந்த இவ்வம்சத்தினர், கொண்டையங்கோட்டை மறவர் பிரிவைச் சேர்ந்தவர்கள். மதுரை மன்னன் விஸ்வநாத நாயக்கர் நிறுவிய 72 பாளையங்களில் ஒன்றாகவும், 148 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய பாளையமாகவும் (சுரண்டை ஜமீனையும் இணைத்து) திகழ்ந்த ஊத்துமலை, பாண்டியப் பேரரசின் நம்பிக்கைக்குரிய தூணாக விளங்கியது. பாண்டிய மன்னர்களுக்குப் பேருதவிகள் புரிந்து, நாட்டில் அமைதி நிலவக் காரணமாக விளங்கிய ஊத்துமலை ஜமீன்தார்களுக்கு, "விஜயகுணராம பாண்டியன்" எனும் சிறப்புப் பட்டமும், உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் வலரிக்கொடி போன்ற உயரிய சின்னங்களும் பல்வேறு காலகட்டங்களில் பாண்டிய மன்னர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். உக்கிரன்கோட்டையைச் சுற்றியிருந்த குரும்பர்களின் இடையூறுகளை அடக்கி, அப்பகுதியில் புதர்க்காடுகளை அழித்து "ஊத்துமலை" எனும் ஊரையும், கோட்டையையும் நிர்மாணித்த பெருமை இவர்களுக்கு உண்டு. "ஊற்று உள்ள மலை...

தென்காசி சதிகல்

Image
தென்காசி சதிகல் "துன்மதி ஆண்டு ஆவணி மாதம் 4ம் நாள் அரியவனதீக்கியார் கணவனைப் பிரியாதாள்" பாகந்தலை ஊரைச் சேர்ந்தவள்.  இடம்: புகைவண்டி நிலைய வலதுபுறச் சாலை. தென்காசி

இந்த இடத்தின் பெயர் RIDGE POINT.

Image
இந்த இடத்தின் பெயர் RIDGE POINT.  கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இங்கே பொழியும் மழை நீரானது மேற்கு திசையில் விழுந்தால் நேத்ராவதி ஆறு வழியாக அரபிக் கடலில் கலந்துவிடும். கிழக்கு திசையில் விழுந்தால் ஹேமாவதி ஆறு மூலமாக வங்காள விரிகுடாவில் கலந்துவிடும்.  இயற்கையின் விந்தை

வலையல் வியாபாரிகளான லம்பாடியர்

Image
சிந்துசமவெளியையும் தமிழகத்தையும் இணைத்த ஓர் குழு. தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் அடிவாரங்களில் வாழும் லம்பாடியர் எனும் மலையின மக்கள் 30 குடிகள், 15 குடிகள் என வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, பென்னாகரம் ஆகிய இடங்களிலும், பெரியார் மாவட்டத்தில் நாயக்கர் தண்டா, (போமியா தண்டா) தேவலாந்தண்டா, புதுத்தண்டா, புருவந்தண்டா போன்ற இடங்களிலும் வட ஆற்காடு மாவட்டத்தில் செங்கம் பகுதியிலும் சேலம் மாவட்டத்தில் குளத்தூர் பகுதியிலும் ஆங்காங்கே குடியமர்ந்து வாழ்கின்றமையினைக் காண முடிகிறது. லம்பாடியர் எனும் இம்மலையின மக்களைப் பற்றி இன அறிமுகம், உடை, உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்கள், தொழில்முறை, வழிபாட்டு முறையும் படங்குமுறைகளும், இன்றைய வாழ்வில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் எனும் நிலைகளிலும் அறியலாம்." பெரியார் மாவட்டத்தில் 30, 31, 3.89 - 1.4.89 ஆகிய நாள்களில் தொடர்ந்து நாயக்கர்தண்டா (40 குடிகள்) தேவலாந்தண்டா (7 குடிகள்) புருவந்தண்டா (30 குடிகள்) காலுத்தண்டா (15குடிகள்) புதுத்தண்டா (30 குடிகள்) ஆகியவற்றில் நேரடித் தகவல்கள், தரவுகள் பெற்று அதன் ...

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள். கல்வெட்டுகள் தேவடிச்சி என்றும் கூறுகின்றன. தளிச்சேரி பெண்டுகள் என்றால் அனைவருமே ஆடல் கற்று நடனமாடியவர்கள் அல்ல. இவர்கள் கோவில் இருந்த பல்வேறு பணிக்காக நியமிக்கப்பட்ட இறைபணியாளர்கள். அதில் சிலரே நடனம் கற்று, ஆடல் மகளிராக இருந்துள்ளனர். சிவ பெருமானை தேவர் என்று அழைப்பது வழக்கம். எனவே, இவர்கள் தேவகணிகையர் என்று அழைக்கப்பட்டனர்.  வைணவ ஆலயங்களில் இறை பணியில் இருந்தோர் "எம்பெருமானடிகள்" என்று அழைக்கப்பட்டனர். கோவிலில் சடங்கு ஏற்பாடு முதல் தூய்மைப்பணி செய்து, ஆடல் வரை பல்வேறு படிநிலையில் தேவரடியார்கள் இருந்துள்ளனர். ஆனால், ஆடல் புரிந்தவருக்கு மட்டும் உரியதாக தேவதாசி அல்லது தேவரடியார் சொல் மாறிவிட்டது. கல்வெட்டுகளில் குறிப்பிடும் தேவரடியார்கள் அனைவருமே ஆடல் மகளிராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. எனவே தான் அரசர் குலம் முதல் வணிகர், உழவுக் குடிகள் என எல்லா சமூகத்தில் இருந்தும் தேவரடியார்கள் இருந்துள்ளனர். இவர்களிடையே தலைமை, பணியாள் என வர்க்க வேறுபாடுகள் இருந்துள்ளதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். தேவரடியார்களுக்குத்‌ தலைக்கோல...