சிந்துசமவெளியையும் தமிழகத்தையும் இணைத்த ஓர் குழு. தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் அடிவாரங்களில் வாழும் லம்பாடியர் எனும் மலையின மக்கள் 30 குடிகள், 15 குடிகள் என வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, பென்னாகரம் ஆகிய இடங்களிலும், பெரியார் மாவட்டத்தில் நாயக்கர் தண்டா, (போமியா தண்டா) தேவலாந்தண்டா, புதுத்தண்டா, புருவந்தண்டா போன்ற இடங்களிலும் வட ஆற்காடு மாவட்டத்தில் செங்கம் பகுதியிலும் சேலம் மாவட்டத்தில் குளத்தூர் பகுதியிலும் ஆங்காங்கே குடியமர்ந்து வாழ்கின்றமையினைக் காண முடிகிறது. லம்பாடியர் எனும் இம்மலையின மக்களைப் பற்றி இன அறிமுகம், உடை, உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்கள், தொழில்முறை, வழிபாட்டு முறையும் படங்குமுறைகளும், இன்றைய வாழ்வில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் எனும் நிலைகளிலும் அறியலாம்." பெரியார் மாவட்டத்தில் 30, 31, 3.89 - 1.4.89 ஆகிய நாள்களில் தொடர்ந்து நாயக்கர்தண்டா (40 குடிகள்) தேவலாந்தண்டா (7 குடிகள்) புருவந்தண்டா (30 குடிகள்) காலுத்தண்டா (15குடிகள்) புதுத்தண்டா (30 குடிகள்) ஆகியவற்றில் நேரடித் தகவல்கள், தரவுகள் பெற்று அதன் ...
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி இடம்: #கல்யாணிபுரம் (ஆழ்வார்குறிச்சி) மாவட்டம் :தென்காசி வட்டம் : தென்காசி #கல்யாணிபுரம் கிராமானது ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் வழியில் 6 கி.மீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. காலம் : இரும்புக்காலம் பொது ஆண்டுக்கு முன் 3ம் நூற்றாண்டு முதல் - பொது ஆண்டுக்கு 3ம் நூற்றாண்டுக்குள் (3BCE - 3CE) #கல்யாணிபுரம் கிராமத்தின் இரும்புக்கால புதைவிடப்பகுதியின் எச்சங்கள் அக்கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் இரும்புக்கால புதைவிடப்பகுதி காணப்படுகிறது. தொல்லியல் எச்சங்களாக முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு மட்பாண்டங்கள், இரும்பிலான பொருள்கள் போன்றவைகள் கிடைக்கின்றன. இந்த இரும்புக்கால புதைவிடப்பகுதியானது கடனாநதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. மேலே காணப்படுகிற முதுமக்கள் தாழி விவசாயத்திற்காக சீரமைக்கும் பொழுது வெளிப்பட்டது.
தென்பாண்டிச் சீமையில், மறவர் பாளையங்களின் வரிசையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தது ஊத்துமலை ஜமீன். இராமநாதபுரம் பகுதியின் "கிழுவை" நாட்டிலிருந்து கிளைத்தெழுந்த இவ்வம்சத்தினர், கொண்டையங்கோட்டை மறவர் பிரிவைச் சேர்ந்தவர்கள். மதுரை மன்னன் விஸ்வநாத நாயக்கர் நிறுவிய 72 பாளையங்களில் ஒன்றாகவும், 148 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய பாளையமாகவும் (சுரண்டை ஜமீனையும் இணைத்து) திகழ்ந்த ஊத்துமலை, பாண்டியப் பேரரசின் நம்பிக்கைக்குரிய தூணாக விளங்கியது. பாண்டிய மன்னர்களுக்குப் பேருதவிகள் புரிந்து, நாட்டில் அமைதி நிலவக் காரணமாக விளங்கிய ஊத்துமலை ஜமீன்தார்களுக்கு, "விஜயகுணராம பாண்டியன்" எனும் சிறப்புப் பட்டமும், உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் வலரிக்கொடி போன்ற உயரிய சின்னங்களும் பல்வேறு காலகட்டங்களில் பாண்டிய மன்னர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். உக்கிரன்கோட்டையைச் சுற்றியிருந்த குரும்பர்களின் இடையூறுகளை அடக்கி, அப்பகுதியில் புதர்க்காடுகளை அழித்து "ஊத்துமலை" எனும் ஊரையும், கோட்டையையும் நிர்மாணித்த பெருமை இவர்களுக்கு உண்டு. "ஊற்று உள்ள மலை...
Comments
Post a Comment