ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.

பாளையம் என்பதும் படைவீடு என்பதும் ஒரே பொருளை உடையது. படை வீரர்கள் தங்கும் தளம் ஆகும். பாலா என்றால் பாதுகாவலர் காக்கும் வீரர் என்று பொருள். கோபாலா என்றால் பசுக்காவலர், தனபாலா என்றால் பணத்தை காக்கும் வணிகர் பணக்காரர்  என்று பொருள். 

பாலயம் என்பதும் பாதுகாப்பு படைவீரர் தங்கும் இடம் என்பது பொருள். எனவே தமிழில் படைவீடு என்பது வடுகில் பாலயம் என்று உள்ளது. "பாலாயமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாயமு என்றால் படை முகாம் என்று பொருள்படும்

வட பகுதியில் இரு நாட்டுக்கு இடையே தீராப் பகை இருந்தால், எல்லையைப் பாதுப்பாக வைத்திருக்க, இருபுறமும் சண்டை ஏற்படாமல் தவிர்க்க ஸ்ரேணிபாலா என்ற வீரர்களை அங்கு அமர்த்த வேண்டும் என கௌடல்யர் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடுகிறார். ஸ்ரேணி என்பது வணிகர்களின் குழு. இது சிரேஷ்டி என்ற சொல்லோடு தொடர்புடையது. ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள். 

ஸ்ரேணி பாலா என்ற சொற்களை போன்றே, ஐநூற்றுவ வணிகக் குழுவினை காத்த படைவீரர், செட்டி வீரர், செட்டி புத்திரர் என தமிழ் கல்வெட்டுகளில் வருகின்றது.

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.