சோழர் கால ஓவியங்கள்..
பெரியகோவிலின் சிவலிங்கம் இருக்கும் கருவறையைச் சுற்றி இருக்கும் உட்திருச்சுற்றுப் பாதை. இதை சாந்தார அறை என்றும் உண்ணாழிகை என்றும் அழைப்பார்கள். கருவறைக்குள்ளேயே மூலவரை வலம் வரும் ஓர் அமைப்பு. இந்த உட்திருச்சுற்றுப் பாதை என்பது ஸ்ரீவிமானத்தின் இருபக்கச் சுவற்றுக்கு இடைபட்ட பாதையாகும். உட்திரு பாதையின் இரு சுவற்றிலும் ஓவியங்கள்வரையப்பட்டுள்ளன.சோழர்கால ஓவியத்தின் மேல் வரையப்பட்ட நாயக்கர் கால ஓவியத்தை மிகச்சிறந்த தொழில் வேதியியல் தொழில் நுட்பம் மூலம் உரித்தெடுத்தார்கள்.பிரித்தெடுத்த நாயக்கர் கால ஓவியத்தையும் மிகச்சிறந்த முறையில் பதப்படுத்தி அருகிலேயே வைத்துள்ளார்கள்.ஸ்ரீவிமானத்தின் தென்பகுதியில் உள்ள ஏணி வழியாக ஏறி திருச்சுற்றுப்பாதையை அடையலாம். மூலவரின் அருகாமையில் உள்ள பக்க வழிகளின் மூலமும் ஓவியம் இருக்கும் திருச்சுற்றை அடையலாம்.ஓவியங்களை15 பிரிவுகளாக பிரித்து 1 முதல் 15 வரை எண்கள் கொடுக்கப்பட்டு ஆவணப்படுத்தியுள்ளனர்.அதாவது 15 Panel களில் ஓவியங்கள் உள்ளன..1- 3 Panel. நாயக்கர் கால ஓவியங்கள்.5 - 12 Panel சோழர் கால ஓவியங்கள்.13 - 15 நாயக்கர் கால ஓவியங்கள்.சோழர் கால ஓவியங்களை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
*Panel. No. 5.* தட்சிணாமூர்த்தி ..வெகுஅற்புதமான ஓவியம். ஆலமரத்தடியில் சிவன் அமர்ந்த தோற்றம். பல வகை சிறப்புகளை கொண்ட ஓவியம் இது.இந்த ஓவியத்தில் சப்தமாதர்களை ஓவியமாகப் பார்க்கலாம். பைரவரும் அவர் முன் உள்ள நாயும் வெகு பிரபலம். இதை அலங்கு நாய் என்பார்கள். ஆலமரம் வெகு விரிவாக வரையப்பட்டுள்ளது. பறவைகள், பாம்பு, குரங்கு, இலை, கிளை, என்று ஒரு பிரம்மாண்ட ஆலமரம். மரத்தில் தொங்கும் சிவனின் பொக்கணம் என்னும் விபூதிபை. இவ்வோயியத்தின் சிறப்பை தொடரும் பதிவுகளில் விரிவாகக் காணலாம்.
*Panel no 7.* சுந்தரர் வரலாறு.தடுத்தாட்கொண்ட புராணம்.தேவாரப் பெரியோர்களில் ஒருவரான சுந்தரர் வரலாற்றின் அதி முக்கிய நிகழ்வுகள் வரையப்பட்டுள்ளன.துல்லியமான சித்திரங்களுடன் வரையப்பட்ட அதி அற்புத ஓவியத்தொகுப்பு இது.
*Panel no 8.( Inner)* தில்லை நடராஜர் ஓவியம். அம்பலத்தில் ஆடும் இறைவனை இராஜராஜர் தன் தேவியருடன் கண்டு பரவசமடையும் காட்சி..
*Panel no 9. ( outer)* இராஜராஜர் லிங்கத்தை வழிபடும் காட்சி.
*Panel no. 10. Corner.* கல்யாணசுந்தரர். சிவன் பார்வதி திருக்கல்யாணக் காட்சி. இந்த Panel லின் இடதுபக்கத் தூணில் உள்ள இரண்டு பேர் வெகுபிரபலம்.இராஜராஜரும் கருவூர்தேவரும் ..?சணகாதி முனிவர்கள்.?இராஜராஜனும் ராஜேந்தினும்.?இராஜராஜனும் சிவபண்டிதரும்.? இன்றும் முடிவு இல்லா விவாதம் கொண்ட ஓவியங்கள்.
*Panel no.11 (inner)* திரிபுராந்தகர்.முப்புறம் எரித்த முதல்வர். இது ஒரு Master piece என்கிறார்கள்.சிவனின் கண்களில் கடும் கோபமும், உதட்டில் புன்சிரிப்பும் ஒருங்கே கொண்ட ஓவியம். பெரிய கோவிலில் சிற்பமாக உள்ள புத்தர் இங்கே ஓவியமாகவும் உள்ளார்..
*Panel no. 11.( outer)* இராவணன் கைலாயத்தைப் பெயர்க்கும் காட்சி..இவ்வளவுதான் சோழர் கால ஓவியங்கள்.
அன்புடன்மா.மாரிராஜன்.
Reference ..The chola murals.P.s.sriraman.
Comments
Post a Comment