Posts

Showing posts from June, 2023

சோழர் கால ஓவியங்கள்..

பெரியகோவிலின்  சிவலிங்கம் இருக்கும் கருவறையைச் சுற்றி இருக்கும் உட்திருச்சுற்றுப் பாதை. இதை சாந்தார அறை என்றும்  உண்ணாழிகை என்றும் அழைப்பார்கள். கருவறைக்குள்ளேயே  மூலவரை வலம் வரும் ஓர் அமைப்பு. இந்த உட்திருச்சுற்றுப் பாதை என்பது ஸ்ரீவிமானத்தின் இருபக்கச் சுவற்றுக்கு இடைபட்ட பாதையாகும். உட்திரு பாதையின்  இரு சுவற்றிலும் ஓவியங்கள்வரையப்பட்டுள்ளன.சோழர்கால ஓவியத்தின் மேல் வரையப்பட்ட நாயக்கர் கால ஓவியத்தை மிகச்சிறந்த தொழில் வேதியியல் தொழில் நுட்பம் மூலம் உரித்தெடுத்தார்கள்.பிரித்தெடுத்த நாயக்கர் கால ஓவியத்தையும் மிகச்சிறந்த முறையில் பதப்படுத்தி அருகிலேயே வைத்துள்ளார்கள்.ஸ்ரீவிமானத்தின் தென்பகுதியில் உள்ள ஏணி வழியாக ஏறி திருச்சுற்றுப்பாதையை அடையலாம். மூலவரின் அருகாமையில் உள்ள பக்க வழிகளின் மூலமும் ஓவியம் இருக்கும் திருச்சுற்றை அடையலாம்.ஓவியங்களை15 பிரிவுகளாக பிரித்து 1 முதல் 15 வரை எண்கள் கொடுக்கப்பட்டு ஆவணப்படுத்தியுள்ளனர்.அதாவது 15 Panel களில் ஓவியங்கள் உள்ளன..1- 3 Panel. நாயக்கர் கால ஓவியங்கள்.5 - 12 Panel சோழர் கால ஓவியங்கள்.13 - 15 நாயக்கர் கால ஓவியங்கள்.சோழர் கால ஓவி...

நெல்லையப்பர் கோயிலில் செப்பேடு சொல்லும் சேதி

Image
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 46,020 திருக்கோயில்களிலும் இருக்கக்கூடிய அரிய ஓலைச் சுவடிகளையும் செப்புப் பட்டயங்களையும் அடையாளம் கண்டு பராமரித்து பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் ஒரு குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் இதுவரை 232 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து 20 செப்புப் பட்டயங்களை அடையாளம் கண்டு மின்படியாக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் இக்குழுவினர் நெல்லையப்பர் கோயிலில் கள ஆய்வு செய்தனர். கள ஆய்வு செய்தபொழுது கோயிலில் இருந்த செப்பேடு மற்றும் செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்தனர். இது குறித்து சுவடித் திட்டப்பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சுவடியியல் துறை பேராசிரியருமான முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: நெல்லை கோயிலில் எனது தலைமையில் சுவடியியலாளர்கள் இரா. சண்முகம், க. சந்தியா, நா. நீலகண்டன், மா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து கள ஆய்வு செய்தோம். அப்போது கோயிலில் 8 செப்புப் பட்டயங்களும் 2 செப்பேடுகளும் இருப்பதைக் கண்டறிந்தோம். செப்பேடுகளை ஆய்வு செய்தபொழுது அதில் கீழ்க்காணும் செய்திகள் இருந்தன. சேர குலராம ...

தொல்லியல் (Archeology) என்றால் என்ன?

ஆர்கியாலஜி (Archeology) என்ற கிரேக்கச் சொல்லானது ஆர்க்காயஸ் என்ற மூலம் பெறப்பட்டதாகும். ஆர்க்காயஸ் என்றால் பழமை என்றும்,  லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் பொருள் வழங்கப்படுகின்றது. தொல்லியல் என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆகும். மேலும் வரலாற்றின் பழங்காலத்தைப் பற்றி அறிய உதவும் கருவிகள், கல்வெட்டுக்கள், பொருட்கள் பற்றிய ஆய்வு தொல்லியல் எனலாம். அதாவது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். *தொல்லியலின் பிரிவுகள்* *1.அகழ்வாராய்ச்சி* மண்ணில் புதைந்து போயிருக்கும் பழங்கால மக்களின் எச்சங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் நிலத்தை அகழ்ந்து செய்யும் ஆய்வுகளுக்கு அகழ்வாராய்ச்சிகள் என்று பெயர். ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து, அப்பகுதியை படிப்படியாகத் தோண்டி, அங்கு கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து விவரங்களைக் கண்டு பிடிப்பது அகழ்வாராய்ச்சியின் வழிமுறையாகும். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களை கரிம பகுப்பாய்வு (கார்பன் டேட்டிங்) உள்ளிட்ட ப...