ஆனைமங்கலம் செப்பேடு (அ) சோழா ராஜ சாசனம் [A Royal Charter (or) a Sasana of the Chola kings (or) Cholas Plates or Charter]

ஆனைமங்கலம் செப்பேடு (அ) சோழா ராஜ சாசனம் [A Royal Charter (or) a Sasana of the Chola kings (or) Cholas Plates or Charter]
கி.பி. 985 முதல் 1014 வரையில் சோழ நாட்டை அரசாண்ட புகழ்பெற்ற இராசஇராச சோழன் காலத்தில் நாகையில் 'ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை' என்னும் பௌத்தப் பள்ளி கட்டப்பட்டது. சுமாத்திரா தீவில் ஸ்ரீ விஜய என்னும் இராச்சியத்தையும், பர்மா தேசத்தில் கடாரம் என்னும் இராச்சியத்தையும் அரசாண்ட  விஜய குலோத்துங்க வர்மன் என்னும் அரசன் வேண்டுகோளின் படி, இந்த விகாரையை நாகைப்பட்டினத்தில் கட்டுவதற்கு இராச இராச சோழன் உத்தரவு கொடுத்தான். இந்த விகாரை மாற விஜயதுங்க வர்மன் தந்தையான சூடாமணி வர்மன் என்பவன் பெயரால் கட்டப்பட்டதாதலின், இதற்குச் 'சூடாமணி விகாரை' என்று பெயராயிற்று. 
இந்தச் சூடாமணி விகாரைக்கு ராஜராஜப் பெரும்பள்ளி என்றும் பெயர் உண்டு. கடாரத்தரசன் இவ்விடத்திலேயே கட்டிய மற்றொரு விகாரைக்கு ராஜேந்திர சோழன் பெரும் பள்ளி என்று பெயர். ஆனைமங்கலம் முதலான ஊர்களை இவ்விகாரைக்குப் பள்ளிச்சந்தமாக இராச இராசன் அளித்தார். ஆயினும், சாசனம் எழுதுவதற்கு முன்னரே அவர் இறந்துவிட, அவனுக்குப் பின் அரசாண்ட இராசேந்திர சோழன், செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதித் தந்தான். அவன் எழுதிக்கொடுத்த சாசனங்கள் லீடன் நகரத்துப் பொருட்காட்சிச் சாலையில் இப்போது இருக்கின்றன. இப்பொழுது இச் சாசனங்களுக்கு 'லீடன் சாசனம்' (Leiden Grant) என்று பெயர் வழங்கப்படுகின்றது. [Epigraphia Indica Vol.22 by Chakravarti, N.P.,] என்னும் நூலில் இந்தச் சாசனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லெய்டன் செப்புத் தகடுகளின் இரண்டு தொகுப்புகள், பெரிய லேடன் தகடு மற்றும் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் உள்ள சிறிய லேடன் தகடுகள் ஸ்ரீவிஜய மன்னர்களின் முயற்சியால் நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தை நிறுவியதைக் குறிக்கிறது. சோழ மன்னன் I இராஜராஜன் (985-1016) ஆட்சியின் போது கட்டுமானம் தொடங்கியது மற்றும் அவரது மகன் மற்றும் வாரிசு I ராஜேந்திரன் (1012-1044) கீழ் முடிக்கப்பட்டது. தமிழில் சிறிய லேடன் தகடுகள் நாகப்பட்டினம் விகாரையுடன் இணைக்கப்பட்ட ஒன்பது அலகு நிலங்களைக் குறிக்கின்றன.
பெரிய தகடுகளில் 111 வரிகள் கொண்ட சமஸ்கிருதப் பகுதியும், 332 தமிழ்ப் பகுதியும் உள்ளன. 21வது ஆட்சியாண்டில், சூளாமணிவர்ம விகாரையில் உள்ள புத்தரின் உயரமான கோவிலுக்கு அரசர் ஆனைமங்கலம் கிராமத்தை வழங்கியதாக சமஸ்கிருத நூல் கூறுகிறது.

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.