பள்ளிப்படை எழுப்புதல், பெருங்கற்கால பண்பாட்டின் தொடர்ச்சி என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"பள்ளிப்படைக் கோயில்" என்பது சோழர்காலத்தில் பெரிதும் காணப்பட்ட இறந்தோர் நினைவாக எழுப்பப்படும் ஆலயமாகும்.
இதில் படை என்பது, படுதல் (இறத்தல் - வீழ்தல்) என்ற சொல்லில் வந்தது. பழைய நடுகற்களில் படுதல் என்பது பட்டான் கல் என வரும். அதன் பொருள் இறந்தோர் கல் என்பதாகும். உதாரணமாக: நடுகல் கல்வெட்டுகளில் வரும் "எய்து பட்டான்கல்" என்பது எதிரி எய்த அம்பு பட்டு இறந்ததை உணர்த்தும்.
பள்ளி என்பது படுத்து உறங்குதலைக் குறிக்கும். எ.கா: பள்ளியறை உறங்கும் அறை. ஆனால், இங்கு "இறப்பு" என்ற நிரந்தர உறக்கத்தை குறிக்கும். பள்ளிப்படை என்பதன் விளக்கப்பொருள்: "இறந்தோர் துயில் கொள்ளுமிடம்" என்பதாகும்.
பள்ளிப்படை எழுப்புதல், பெருங்கற்கால பண்பாட்டின் தொடர்ச்சி என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரச குடும்பத்தில் உள்ளவர்கள், அரசர்கள் இறந்தால் பள்ளிப்படைக் கோவிலாக எழுப்பப்படுகிறது.
படம்: திருப்புறம்பியப் போரில் சோழருக்கு ஆதரவாக போரிட்டு வீரநிலை அடைந்த கங்க மன்னன் பிருத்விபதியை நன்றியுடன் நினைவுகூறும் விதமாக, சோழர்கள் எழுப்பிய பள்ளிப்படை எனக் கருதப்படுகிறது. ஆனால் கல்வெட்டு தகவல் ஏதும் இல்லை. திருப்புறம்பியம்.
Comments
Post a Comment