மீனா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகின்றார். இவர் தன் தாய் லட்சுமி அவர்களுடன் நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றுள்ளார். அந்த கோயிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தின் அதிட்டானப் பகுதியின் பட்டிக்குக் கீழே ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். பின்னர் அதனைப் படி எடுத்து வாசித்துள்ளார். முதல் வரியில் “சேர” என்ற வார்த்தையும் இரண்டாவது வரியில் “மொழிந்தருளி” என்றும்; அடுத்த வரியில் “விளக்குச் செல்வதாக’ எனவும்; நான்காவது வரியில் “இவ்வூர் நாலஞ்சேரி” எனவும்; கடையில் வரியில்”இவ்வூர்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. இதனைப் படித்த பேராசிரியர் முருகன் மற்றும் மதிவாணன் “இந்தக் கல்வெட்டின் முழுத் தகவலும் கிடைக்கவில்லை எனவும், இக்கல்வெட்டு இடைக்காலத் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டுள்ளன எனவும், முதல் இரண்டு வரிகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில் “கொடை அளிக்கும் முன்பு அரசரால் நேரடியாக ஆணையிடப்பட்டதையும், மூன்று மற்றும் நான்காவது வரிகளின் மூலமாக “நான்கு சேரிகள் உள்ளதையும் இந்தக் கல்வெட்...
தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள். கல்வெட்டுகள் தேவடிச்சி என்றும் கூறுகின்றன. தளிச்சேரி பெண்டுகள் என்றால் அனைவருமே ஆடல் கற்று நடனமாடியவர்கள் அல்ல. இவர்கள் கோவில் இருந்த பல்வேறு பணிக்காக நியமிக்கப்பட்ட இறைபணியாளர்கள். அதில் சிலரே நடனம் கற்று, ஆடல் மகளிராக இருந்துள்ளனர். சிவ பெருமானை தேவர் என்று அழைப்பது வழக்கம். எனவே, இவர்கள் தேவகணிகையர் என்று அழைக்கப்பட்டனர். வைணவ ஆலயங்களில் இறை பணியில் இருந்தோர் "எம்பெருமானடிகள்" என்று அழைக்கப்பட்டனர். கோவிலில் சடங்கு ஏற்பாடு முதல் தூய்மைப்பணி செய்து, ஆடல் வரை பல்வேறு படிநிலையில் தேவரடியார்கள் இருந்துள்ளனர். ஆனால், ஆடல் புரிந்தவருக்கு மட்டும் உரியதாக தேவதாசி அல்லது தேவரடியார் சொல் மாறிவிட்டது. கல்வெட்டுகளில் குறிப்பிடும் தேவரடியார்கள் அனைவருமே ஆடல் மகளிராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. எனவே தான் அரசர் குலம் முதல் வணிகர், உழவுக் குடிகள் என எல்லா சமூகத்தில் இருந்தும் தேவரடியார்கள் இருந்துள்ளனர். இவர்களிடையே தலைமை, பணியாள் என வர்க்க வேறுபாடுகள் இருந்துள்ளதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். தேவரடியார்களுக்குத் தலைக்கோல...
பாளையம் என்பதும் படைவீடு என்பதும் ஒரே பொருளை உடையது. படை வீரர்கள் தங்கும் தளம் ஆகும். பாலா என்றால் பாதுகாவலர் காக்கும் வீரர் என்று பொருள். கோபாலா என்றால் பசுக்காவலர், தனபாலா என்றால் பணத்தை காக்கும் வணிகர் பணக்காரர் என்று பொருள். பாலயம் என்பதும் பாதுகாப்பு படைவீரர் தங்கும் இடம் என்பது பொருள். எனவே தமிழில் படைவீடு என்பது வடுகில் பாலயம் என்று உள்ளது. "பாலாயமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாயமு என்றால் படை முகாம் என்று பொருள்படும் வட பகுதியில் இரு நாட்டுக்கு இடையே தீராப் பகை இருந்தால், எல்லையைப் பாதுப்பாக வைத்திருக்க, இருபுறமும் சண்டை ஏற்படாமல் தவிர்க்க ஸ்ரேணிபாலா என்ற வீரர்களை அங்கு அமர்த்த வேண்டும் என கௌடல்யர் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடுகிறார். ஸ்ரேணி என்பது வணிகர்களின் குழு. இது சிரேஷ்டி என்ற சொல்லோடு தொடர்புடையது. ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள். ஸ்ரேணி பாலா என்ற சொற்களை போன்றே, ஐநூற்றுவ வணிகக் குழுவினை காத்த படைவீரர், செட்டி வீரர், செட்டி புத்திரர் என தமிழ் கல்வெட்டுகளில் வருகின்றது....
Comments
Post a Comment