தென் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களையும், அங்குள்ள சிறிய கோட்டைகளையும் குறிப்பிட்டு வரைந்துள்ள வரைபடம்.
இந்த வரைபடம் 1699ம் ஆண்டு பிரஞ்சு ஓவியர் ஒருவரால் வரையப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் பல ஐரோப்பிய தேசத்தவர்கள், நமது நாட்டில் காலூன்ற முயன்ற காலத்தில் வரையப்பட்டது. அவர்களுடைய படைகளை, அவர்களின் இலக்குகள் நோக்கி நகர்த்துவதற்காக, மிகவும் துல்லியமாக, தென் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களையும், அங்குள்ள சிறிய கோட்டைகளையும் குறிப்பிட்டு வரைந்துள்ள வரைபடம். பழைய இராஜ பாட்டைகள் என்றும் அழைக்கலாம்.
மதுரையை ஆட்சி செய்த, இராணி மங்கம்மாள் அவர்கள் மதுரையிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் செல்லும் சாலைகளை சிறப்பாக நிர்வாகம் செய்துள்ளார்.. இந்த வரைபடமும் இராணி மங்கம்மாள் காலத்தியது. அப்போதைய சாலைகள் அனைத்தும் சிறப்பாக வரையப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட 325 ஆண்டுகளுக்கு முன்னர், தற்போதைய நவீன விஞ்ஞான வசதிகள் எதுவுமில்லாத காலத்தில் இத்தகைய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.. தற்போதைய Google வரைபடத்தை பழைய வரைபடத்தின் மேலமர்த்தி பார்க்கும்போது, பழைய வரைபடத்தின் துல்லியம் காணக்கிடைக்கின்றது.. கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் அப்படியே பொருந்துகின்றது. இதை திருச்சிக்கு தெற்கே அமைந்திருந்த ஒட்டு மொத்த நாயக்கர்கள் காலத்திய பாண்டிய தேசத்தின் வரைபடம் எனக்கொள்ளலாம்..
இந்திய நாட்டில், வியாபாரம் நிமித்தமாக பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்பது பற்றி வெளியான புத்தகம் ஒன்றில் காணப்படும் இந்த வரைபடம், முதலில் நமது நாட்டின் படம் என்பதுதானா என்று சந்தேகம் ஏற்பட்டது. நாம் இப்போது வடக்கை மேலாக வைத்து பார்க்கும் வரைபடம் போலல்லாமல், மேற்குத்திக்கை மேலாக வைத்து வரையப்பட்டுள்ளது.. அதனை வடக்காக திருப்பி வைத்து பார்த்தபோதுதான் நமது தென் தமிழகத்தின் வரைபடம் என்பது சரியாக தெரிந்தது.. பழைய படங்களின் பேரில் ஆர்வமிக்க சரித்திர ஆர்வலர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடும் என்பதால் சிறிய அளவில் தெளிவான மாறுதல்களுடன் காட்சிப்படுத்தி இருக்கின்றேன்.
நான் பார்த்த புத்தகத்தில் உள்ள வரைபடம், திசையை மாற்றி அமைத்த வரைபடம், தற்போதைய வரைபடத்தின் மேல் அமர்த்தி, ஒப்பிட்டுப் பார்த்த படம் மூன்றையும் பதிவு செய்துள்ளேன். படங்களை zoom செய்து பார்ப்பதற்கு எதுவாக பெரிய படங்களையே பதிவேற்றி உள்ளேன். பெரிய திரையில் பார்த்தால் அனைத்து ஊர்களையும் அடையாளம் காண இயலும்.. பார்த்து, இரசித்து, தங்களின் மேலான கருத்துக்களை பதிவிட வேண்டுகின்றேன்.. நன்றி.
Comments
Post a Comment