திருநெல்வேலியில் ராஜராஜன் கல்வெட்டு - திருவாலீஸ்வரம்.

திருவாலீஸ்வரம்

இவ்வூர் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மன்னார் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் கடனாநதிக் கரையில் நெல்வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள சிவன் கோயில் இவ்வூரின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றது.

 கடனாநதியின் பெயர் கடம் என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்துள்ளது. கடம் என்றால் பானை அல்லது கலசம் என்று பொருள். இந்நதிநீர் அகஸ்தியர் கையிலிருந்த கலசநீர் என்றும் அகஸ்தியர் இக்கோயிலுக்கு மேற்கேயுள்ள மலையடிவாரத்தில் தங்கியிருந்தார் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோயில் சோழர் காலக் கட்டடக் கலைப்பாணிக்கு கல்வெட்டுகள் இவ்வூரைத் திருவாலீஸ்வரம் என்றும் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன.

எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலில் சோழர், சோழ பாண்டியர் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 9-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூரை முள்ளிநாட்டு ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகின்றது. பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் மன்னார்கோயில் ஆகிய இம்மூன்று ஊர்களும் ஒரே பகுதியாக ராஜராஜச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியுள்ளது. முதலாம் இராசராசன் காலத்திலும் அவனுக்குப் பின்னும் இப்பகுதி ஒரு முக்கிய இராணுவ மையமாக விளங்கியுள்ளது. இவர்கள் காலத்தில் அவனுக்குப பின்னும் இப்பகுதி ஒரு முக்கிய இராணுவ மையமாக விளங்கியுள்ளது. 
இவர்கள் காலத்தில் நாகர்கோவிலில் கோட்டாற்றுக்கு அருகில் நிறுத்தியதைப் போன்று பெரும் படையொன்று இப்பகுதியிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு மூன்று கை மகாசேனை என்று பெயர். சடாவர்மன் சுந்தரசோழ பாண்டியனின் கல்வெட்டு இக்கோயில் இறைவனைத் திருவாலீஸ்வரம் உடைய மகாதேவர் எனக் குறிப்பிடுகின்றது. ஊரினை முள்ளி நாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டு ராஜராஜப் பாண்டி நாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகின்றது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடாவர்மன் குலசேகர பாண்டியன் (பூவின்கிழத்தி) சீவல்லபன் ஆகியோரின் கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பாண்டியர் கல்வெட்டுகள் இவ்வூரை திருவாலீஸ்வரம்ம் என்றும் ராஜ ராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன.

இங்குள்ள சௌந்தர்யநாயகி அம்மன் கோயிலில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிற் கல்வெட்டுகளிலிருந்து திருவாலீஸ்வரம் என்பது ஊரினையும், கோயிலினையும் குறிப்பிடுவதை அறியலாம். இக்கோயில் விமானத்தில் கர்ணகூடுசாலைப் பகுதிகளில் காணப்படும் சிற்பங்கள் சிறந்த கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.

Comments

Post a Comment

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.