தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.
தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள். கல்வெட்டுகள் தேவடிச்சி என்றும் கூறுகின்றன. தளிச்சேரி பெண்டுகள் என்றால் அனைவருமே ஆடல் கற்று நடனமாடியவர்கள் அல்ல. இவர்கள் கோவில் இருந்த பல்வேறு பணிக்காக நியமிக்கப்பட்ட இறைபணியாளர்கள். அதில் சிலரே நடனம் கற்று, ஆடல் மகளிராக இருந்துள்ளனர். சிவ பெருமானை தேவர் என்று அழைப்பது வழக்கம். எனவே, இவர்கள் தேவகணிகையர் என்று அழைக்கப்பட்டனர். வைணவ ஆலயங்களில் இறை பணியில் இருந்தோர் "எம்பெருமானடிகள்" என்று அழைக்கப்பட்டனர். கோவிலில் சடங்கு ஏற்பாடு முதல் தூய்மைப்பணி செய்து, ஆடல் வரை பல்வேறு படிநிலையில் தேவரடியார்கள் இருந்துள்ளனர். ஆனால், ஆடல் புரிந்தவருக்கு மட்டும் உரியதாக தேவதாசி அல்லது தேவரடியார் சொல் மாறிவிட்டது. கல்வெட்டுகளில் குறிப்பிடும் தேவரடியார்கள் அனைவருமே ஆடல் மகளிராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. எனவே தான் அரசர் குலம் முதல் வணிகர், உழவுக் குடிகள் என எல்லா சமூகத்தில் இருந்தும் தேவரடியார்கள் இருந்துள்ளனர். இவர்களிடையே தலைமை, பணியாள் என வர்க்க வேறுபாடுகள் இருந்துள்ளதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். தேவரடியார்களுக்குத் தலைக்கோல...