Posts

Showing posts from September, 2023

சமூக அறிவியல் மன்றம் துவக்க விழா

தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரம் மாதா பட்டணம் சற்குண சத்திய வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் துவக்க விழா இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி அமிர்த சிபியா அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றி சிறப்பித்தார்கள். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு தங்கராஜன் அவர்கள் முன்னிலை வகித்து சமூக அறிவியல் மன்ற துவக்க விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினார்கள். சமூக அறிவியல் மன்றத்தில் சூரிய குடும்பம் பற்றி மாணவி ஜியாஷ்னி பேசினார். அப்துல் கலாம் பொன்மொழிகளை மாணவி காவியா கூறினார். வீரமங்கை வேலு நாச்சியார் பற்றி ஏஞ்சல் பேசினார் .மாணவர்கள் கணேஷ் மற்றும் மாதேஷ் இருவரும் சேர்ந்து இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார் . சொர்னேஷ்மற்றும் மாதேஷ் இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டின் மாநில சின்னங்களை பற்றி பேசினர் .மாணவி ரேஷ்மா தலைவர்கள் பற்றிய கவிதை கூறினார். மாணவி அஸ்மிதா தேசியக்கொடி பற்றிய பாடல் ஒன்று பாடினார். மாணவன் சாரதி சந்திராயன் 3 திட்டத்தை பற்றி பேசினார. மாணவன் சஞ்சய் வரலாற்று முக்கியத்துவம் ம...