Posts

Showing posts from July, 2023

தேவரடியாரும் தேவதாசிகளும்

Image
ஆதி காலம் தொட்டு பெண் என்பவள் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருக்கிறாள். பிறப்பிலிருந்து வளரும் சூழலில் இருந்து வேலை செய்யும் முறையில் இருந்து இறப்பு வரைக்கும் பெண் யாரோ ஒருவரால் கட்டமைக்கப்படுகிறாள். தேவரடியார் முறையும் தேவதாசி முறையும் தேவதாசி முறை எனும் பெயரில் பெண்களை சூறையாடி வந்த சடங்குமுறை 1947 ஆம் ஆண்டில் வழக்கொழிந்து போனது. தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.| தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை. தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காக தானே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் இல்லை. சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் த...