பொதிகை மலை என்றழைக்கப்படும் பொதியில் (Potiyil) பௌத்தம்
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இணையும் எல்லையில் அமையப்பெற்றுள்ளது. தொன்மைக் காலத்தில் புத்த மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும் பொதிகை. சீனா மற்றும் திபெத் நாட்டில் புத்த மத எழுத்துப் படைப்புகளில் இம்மலைப் பகுதி போதலகிரி (Pothalagiri) போதலா (Potala) மற்றும் போதலக (Potalaka) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மகாயான மரபு புத்த மதத்தின் படி போதலக, புத்த கடவுள் அவலோகிதா-வின் உறைவிடம் பொதிகை ஆகும். அவலோநிதா, தனது துணைவியார் தாராதேவியுடன் இம்மலையில் தங்கியதாக சொல்லப்படுகிறது. தாராசூக்கம் (Tarasookkam) என்ற புத்தமத நூலில் அவலோகிதா- வை போதலகிரி நிவசினி (Potalagiri nivasini) என்று குறிக்கின்றது. நீண்ட காலமாக போதலக மலைப் பற்றிய உண்மை விவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கப் பெறவில்லை. கி.பி.645-ல் இந்தியாவில் பயணம் செய்த சீன யாத்திரிகள் யுவான் சுவாங் தனது பயண குறிப்பில் போதலாக மலையின் இருப்பிடம் மற்றும் அதன் அழகைப் பதிவு செய்துள்ளார். யுவான் சுவாங்கின் குறிப்பின்படி போதலாக மலை மோ-லோ-ய (Mo-lo-ya) Malaya (மயல) மலையின் கிழக்கிலும், மோ-லோ-கு.த. (மலை நாடு)க்கு வ...