சிந்துசமவெளியையும் தமிழகத்தையும் இணைத்த ஓர் குழு. தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் அடிவாரங்களில் வாழும் லம்பாடியர் எனும் மலையின மக்கள் 30 குடிகள், 15 குடிகள் என வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, பென்னாகரம் ஆகிய இடங்களிலும், பெரியார் மாவட்டத்தில் நாயக்கர் தண்டா, (போமியா தண்டா) தேவலாந்தண்டா, புதுத்தண்டா, புருவந்தண்டா போன்ற இடங்களிலும் வட ஆற்காடு மாவட்டத்தில் செங்கம் பகுதியிலும் சேலம் மாவட்டத்தில் குளத்தூர் பகுதியிலும் ஆங்காங்கே குடியமர்ந்து வாழ்கின்றமையினைக் காண முடிகிறது. லம்பாடியர் எனும் இம்மலையின மக்களைப் பற்றி இன அறிமுகம், உடை, உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்கள், தொழில்முறை, வழிபாட்டு முறையும் படங்குமுறைகளும், இன்றைய வாழ்வில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் எனும் நிலைகளிலும் அறியலாம்." பெரியார் மாவட்டத்தில் 30, 31, 3.89 - 1.4.89 ஆகிய நாள்களில் தொடர்ந்து நாயக்கர்தண்டா (40 குடிகள்) தேவலாந்தண்டா (7 குடிகள்) புருவந்தண்டா (30 குடிகள்) காலுத்தண்டா (15குடிகள்) புதுத்தண்டா (30 குடிகள்) ஆகியவற்றில் நேரடித் தகவல்கள், தரவுகள் பெற்று அதன் ...