நானாதேசி-திசையாயிரம்-திருமஞ்சனக் கிணறுகள்-குடிநீர் கிணறுகள்
தூத்துக்குடி மாவட்டம், மடத்தூர் நெடுஞ்சாலை அருகே "பங்கய மலராள் கேழ்வன்....." என்று தொடங்கும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 790 ஆண்டுகள் பழமையான கிணற்றுடன் கூடிய, மங்கலச் சொற்களுடன் பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. "தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில், பண்டைய காலத்தில் நிலவி வந்த பல்வேறு வணிகக் குழுக்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றில் நானாதேசி என்போர், எல்லா நாடுகளுக்கும் கடல் வழி மற்றும் தரைவழியாகச் சென்று வணிகம் செய்தவர்களாகவும், திசையாயிரம் என்போர் எல்லாத் திசைகளுக்கும் சென்று வணிகம் செய்வோராகவும் வாழ்ந்துள்ளனர். இத்தகைய வணிகக் குழுவினர், தங்களுக்கென பாதுகாப்பு வீரர்களையும் கொண்டிருந்தனர். மேலும், பிராமணர்களுக்கு தானமாக ஒரு ஊரினை மங்கலம் என்ற பெயரில் உருவாக்கி கொடுத்து, அதன் காவல் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு உள்ளதையும் அறிய முடிகிறது. இக்குறிப்பிட்ட கமலைக் கிணற்றின் கீழ்பகுதியில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு (கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை) கி.பி.1234-இல் உள்ள 20 வரிகளைக் கொண்டுள்ளது. அதன் முன்பு 7 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும்...